ஞாயிறு, 21 நவம்பர், 2010

புலிகள் இரணடாக இயங்கி வருகின்றனர். ஏதோ கொள்கைகளினால்

புலி இரண்டு மாவீரர் தினம் கொண்டாடுகிறது. ஜெர்மனி முன்சன் நகரில் புலிகள் இரணடாக இயங்கி வருகின்றனர். ஏதோ கொள்கைகளினால் முரண்பட்டு பிரிந்து இயங்கவில்லை. தேசியத்தலைவர் இனி வரமாட்டார் என்று தெரிந்தவுடன் புலிகளுக்கிடையில் சொத்துப்பிரச்சினைகள் ஏற்பட்டன. உயர்மட்ட புலிகளுக்கிடையில் புலிகளின் பணத்தை யார் யார் அபகரிப்பது என்கிற சண்டையில் ஏற்பட்ட பிளவுகள் ஏற்பட்டு பிரிந்து போயுள்ளனர். மாவீரர் தினம் கொண்டாடுவது இறந்து போன புலிகளுக்காக அல்ல. மாவீரர் தினத்தில் அதை இதை வித்து காசு பார்க்கலாம் என்பதினால் மாவீரர் தினத்தை பெரியளவில் புலிகள் கொண்டாடி வந்தனர். ப+ முதல் கொத்துரொட்டி வரை ஓகோ என்றளவில் பிஸினஸ்தான்.
ஜெர்மனியில் முன்சனில் காந்தன் தீபன் என இரணடாக பிரிந்து இரணடு மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அங்கு வாழும் தமிழர்கள் இரணடு மாவீரர் தினத்திற்கும் போவதில்லை என்கிற முடிவில் இருக்கின்றனர். வீட்டிலே இருந்து தமிழ் ரீவி நிகழ்ச்சிகைள அல்லது சீரியல்களை பார்த்தால் நிம்மதி. இவங்கட மாவீரர் தினத்திற்கு போய் ஏன் வில்லங்கத்தை வாங்குவான் என்கிற அச்சத்தில் உள்ளனர். புலி என்று திரிந்தால் சிலோன் ஏயர்போர்டில் பிரச்சினை வரும் என்கிற பயமும் பலருக்கு உள்ளது. ஐ.பி.சி சுந்தர் சிலோன் ஏயர்போர்ட்டில் பிடிபட்டபிறகு பல புலிகளுக்கு வயித்தில் புளியைக் கரைத்து இருக்கிறது.
சனமும் போகாவிட்டால் மாவீரர் தினத்தில் வருமானம் இருக்காது. இந்தமுறை மாவீரர் தினத்தில் வரும்படி குறைந்தால் அடுத்தமுறை மாவீரர் தின விழாக்கள் குறைந்து விடலாம் அல்லது இல்லாமல் போய்விடலாம். இந்த முறை மாவீரர் தினம் ஒரு டெஸ்ட்தான். சனம் வருகுதா இல்லையா என பார்க்க புலிகள் அதனைச் செய்கிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை ரி.பி.சி வானொலியில் நடைபெற்ற கலந்துரையாடலில் புலிகளின் மாவீரர் தினத்தை ஒரு பிடி பிடித்தார்கள். மாவீரர் தினத்தில் ப+ விற்க அல்லது கொத்து ரொட்டி வித்து காசு பார்க்க நினைத்த ஒரு புலி ஒன்று வந்து தூஷணம் பேசிவிட்டு போனது. தனது வருமானத்திற்கு வேட்டு வைக்கிறார்கள் என்கிற ஆத்திரத்தில் அதனால் என்ன முடியுமோ அதைச் செய்து விட்டுப்போனது.
தமிழ்ச்சனம் புலித்தொல்லை இல்லாமல் இப்போ சந்தோஷமாக இருக்கிறது. காசு கேட்க யாரும் வீட்டுக்கதவை தட்டுவதில்லை. ஊர்வலத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. சந்தோஷமாக இருக்குதுகள். மக்கள் சந்தோஷமாக இருப்பது புலிகளுக்கு பிடிக்காத விஷயம். எதையாவது செய்து காசு சேர்க்க புலிகள் செய்யும் முயற்சிகளை புலம்பெயர்மக்கள் ஒன்று திரண்டு முறியடிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக