வெள்ளி, 19 நவம்பர், 2010

குவைத்தில் பணிபுரிந்து நாடு திரும்பிய லட்சுமியை மிரட்டியவர் கைது

குவைத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து நாடு திரும்பிய லட்சுமி என்ற பெண்ணின் உடலிலிருந்து சத்திரசிகிச்சை மூலம் ஐந்து கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆனால் இவரை குவைத்துக்கு பயணம் செய்ய ஏற்பாடு செய்த பயண முகவரின் தரகர் இவருக்கு மிரட்டல் விடுத்ததாக அப்பெண் கொக்கரல்ல பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து அவரைக் கைது செய்த கொக்கரல்ல பொலிஸார் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தனர்.
இவர் மூலமே,தான் குவைத்துக்கு பயணம் செய்ய பயண முகவரின் உதவியை பெற்றதாகவும்,ஆனால் தம்மைப் பற்றி பொலிஸாரிடமோ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமோ முறையிடக்கூடாது என மிரட்டியுள்ளதாகவும் அப்பெண் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.
இதேநேரம் திங்கட்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இப்பெண் தற்போது குணமடைந்து வருவதாக குருநாகல் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக