வெள்ளி, 19 நவம்பர், 2010

கொல்கத்தா விஸ்வநாதன் காலமானார் : 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்


கொல்கத்தா: பழம்பெரும் நடிகரும், பேராசிரியருமான என். விஸ்வநாதன் (81) நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். கொல்கத்தா விஸ்வநாதன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

கல்லூரிப் பேராசிரியர், நடிகர் , நாடக நடிகரான அவருக்கு பரமிதா என்ற மனைவியும், அசோக் என்ற மகனும் உள்ளனர்.

விஸ்வநாதன் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 30 தமிழ் படங்கள் அடக்கம். 1961-ம் ஆண்டு வெளிவந்த சத்யஜித் ரேயின் கஞ்சன்ஜுங்கா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து மூன்று முடுச்சு படத்தில் நடித்தார்.

கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலம் பயிற்றுவித்து வந்தார். அவர் அன்மையில் காலமான பேராசிரியர் பி. லாலின் மைத்துனன் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக