வியாழன், 4 நவம்பர், 2010

அஜித்தின் தீபாவளி ஸ்பெஷல்...!



     மங்காத்தா ஆட்டம் தொடங்கினாலும் தொடங்கியது... படக்குழுவினர்களும், ரசிகர்களும் குஷியாகி கொண்டாடும்படியான வகையில் அஜித்தின் ‘ட்ரீட்’ நடவடிக்கைகள் களைகட்டிவிட்டது.


தலப்பாகட்டு பிரியாணி சாப்பிட்டவர்கள் ஏராளம். ஆனால் ‘தல’ பார்த்து பார்த்து செய்த பிரியாணியை செம கட்டு கட்டியவர்கள் மங்காத்தா படக்குழுவினர் மட்டும்தான். கார் ஓட்டுவது மட்டும் கைவந்தக் கலை இல்லை... பிரியாணி செய்வதிலும் தல ஸ்பெஷலிஸ்டாம். அப்படி, தனது கைப்பக்குவத்தில் செய்த பிரியாணியை தனது 50 வது படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க பாடுபடும் படக்குழுவினர் அனைவருக்கும் பரிமாறி தனது வாஞ்சை குணத்தை தாராளமாய் வெளிப்படுத்தியிருக்கார் அஜித். 

ஆனால் இந்த ‘தல’ப்பாகட்டு பிரியாணி விருந்தில் திரிஷா மட்டும் மிஸ்ஸிங்காம்.திர்ஷாவுக்கு இன்னொரு நாள் ஸ்பெஷலான கவனிப்பு தல வீட்டிலேயேகூட கிடைக்கலாம். சரி... இப்போ பிரியாணி விருந்தை விட பெரிய விருந்து... அதுவும் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் விஷயத்துக்கு வருவோம்...
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மங்காத்தா டிரெய்லரை வெளியிட்டு அமர்க்களப்படுத்தியதைப் போல,தீபாவளிக்கு படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ்களை போஸ்டராகவும்... பத்திரிகை விளம்பரமாகவும் வெளியிடப் போகிறதாம் மங்காத்தா டீம். 

இது தனது 50 வது படம் என்பதாலேயே,  கடுமையான உடற்பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பாக ‘சிக்ஸ் போக்’ ரேஞ்சுக்கு உடலை மெருகேற்றி வைத்திருக்கிறார் அஜித். அவரின் லுக், ஸ்டைல், ஃபெர்பார்மன்ஸ் எல்லாம் இதுவரை இல்லாத அளவிற்கு மங்காத்தாவில் சிறப்பாக அமைந்திருக்கு என படக்குழுவினர் வியந்து கூறிவருகிறார்கள்.  இந்த வியப்பை இனி ரசிகர்களுக்கும் ஏற்படுத்த தீபாவளிக்கு வெளியாகிறது மங்காத்தா படத்தின் “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்”.     

இதுதான் ரசிகர்களுக்கு அஜித்தின் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்... அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக