செவ்வாய், 23 நவம்பர், 2010

சாய்பாபா பிறந்தநாள்: தங்கரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி


புட்டபர்த்தி: உலகில் உள்ளது ஒரே மதம்; அதுதான் அன்பு. உலகில் உள்ளது ஒரே ஜாதி; அதுதான் மனித ஜாதி. உலகில் உள்ளது ஒரே மொழி; அதுதான் இதய மொழி என்று உலகிற்கு எடுத்துக் கூறிய சத்ய சாய் பாபாவின் 85வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் தங்கரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசிவழங்கினார்.

சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடந்தது. விழாவுக்கு மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தலைமை வகித்து பேசியதாவது: இறைப்பணி, கல்வி, சுகாதாரம், மனிதநேயம், சமுதாய மாற்றத்தில் சாய்பாபாவின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமங்களில் குடிநீர் வழங்கும் பெரிய பணியில் பாபா ஈடுபட்டிருப்பது வரவேற்க்கத்தக்கதாகும். ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னைக்கும் குடிநீர் வழங்கியும், பெங்களூருவுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் மருத்துவமனையும், கல்வி சேவையிலும் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சாய்பாபா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தமிழகத்தில் சுனாமி, குஜராத்தில் பூகம்பம், ஓரிசாவில் வெள்ளப்பாதிப்பு உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இதனால் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவாதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு உள்ளனர். இதன் மூலம் நம் நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஆன்மிகத்தை கொண்டு சென்றுள்ளார். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். தற்போது நடக்கும் பிறந்த நாள் விழாவில் ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய ஆசியா நாடுகள், இலங்கை, வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார்.

முன்னதாக பிரசாந்திநிலையத்திலிருந்து விழா நடக்கும் ஹில் வியூ ஸ்டேடியத்துக்கு தங்கரதத்தில் சாய்பாபா ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சாய்பாபாவின் கல்வி பணியை மேலும் மேம்படுத்தும் வகையில் டாடா குழுமத்தலைவர் ரத்தன் டாட்டா புதிய சாப்ட்வேர் கருவியை சாய்பாபாவிடம் வழங்கினார். விழாவில் ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், முதல்வர் ரோசய்யா, தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் கவர்னர் சிவராஜ்பாட்டீல் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

  புட்டபர்த்தி: அவருடைய இருப்பிடமான புட்டபர்த்தியில் இந்த நாளைக் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சத்ய சாய் பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள புட்டபர்த்தி ரயில் நிலையம் பக்தர்களை வரவேற்க தயாராக உள்ளது.

இங்கு வரும் ஒவ்வொரு பக்தரையும் வரவேற்று பிரசாந்தி நிலையத்திற்கு அனுப்பி வைக்க சேவா தள தொண்டர்கள் தயாராக உள்ளனர். ரயில் நிலையத்தில் பக்தர்கள் இறங்கியதும் அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ தகவல் மையம் திறக்கப்பட்டு, சாய் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், பக்தர்களுக்கு தேவையான தகவல்கள் அளித்து வழிகாட்ட ஆயத்தமாக உள்ளனர். ரயில் நிலையம் முதல் பிரசாந்தி நிலையம் வரை அனைத்து பகுதிகளும் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிஜி தீவில் பிறந்தநாள் விழா: 3 ஆயிரத்திற்கும் மேலான சாய் பக்தர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி பிஜி தீவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்து. உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் பாபாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த தீவு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. இங்கு சிறப்பு பஜனை, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த தீவில் உள்ள சாய் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விகேஷ்சவுகான் கூறுகையில் சாய்பாபா பிறந்த நாளில் பலருக்கும் உதவி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
ஸ்ரீராம் - கும்பகோணம்,இந்தியா
2010-11-23 17:27:54 IST
பகவான் ஸ்ரீ சாய் பாபா அவர்கள் அவருடைய கருணையாலும், அருளாலும் எல்லோரையும் நன்றாக வைத்து, எல்லோரிடமும் அன்பு, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், எல்லோருக்கும் உதவும் குணம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். ஓம் சாய், ஸ்ரீ சாய், ஜெய ஜெய சாய் !...
Ravichandran - Rwanda,இந்தியா
2010-11-23 17:15:13 IST
You have done a wonderful health service to all religious people. We wish you a happy birth day....
ஜெகதீஸ்வரன்.இரா - இராமேஸ்வரம்,இந்தியா
2010-11-23 16:56:43 IST
மக்களுக்கு தொண்டு செய்யும், கருணை உள்ளம் கொண்டவரின் பிறந்தநாளை நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியதுதான்....
அதீசிவம் - bangalore,இந்தியா
2010-11-23 16:49:23 IST
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் அதீசிவம்...
N.Siva - Muscat....ramanathapuram,இந்தியா
2010-11-23 16:49:17 IST
வாழ்க வளமுடன் ...உங்களின் இந்த பிறந்த நாளில் உலகில் உள்ள அனைவருக்கும் நன்மை உண்டாக வேண்டும் என்று அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் அன்பு நெஞ்சம் நா.சிவா ......
பாக்யா - சென்னை,இந்தியா
2010-11-23 16:47:18 IST
அன்புள்ள சத்ய சாய் பாபாவுக்கு வாழ்த்து கூற வயதில்லை இருந்தாலும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நன் உங்களிடம் வேண்டி கொள்வது எனக்குள் இருக்கும் கெட்ட பழக்கத்தை மாற்றுங்கள். என்னை ஒரு நல்ல மனிஷியாக மாற்றுங்கள். இனிமேலாவது நான் தவறுகள் செய்யாமலிருக்க எனக்கு வழி காட்டுங்கள். நல்ல பாதையில் என்னை அழைத்து செல்லுங்கள். Aum Sri Sathya Sai Bhagavanuku Jai.......................
விஸ்வா சிவகலா அஜீவ் - thirunelveli,இந்தியா
2010-11-23 16:47:15 IST
சாய் ராம் சாய் ராம் ஜெய ஜெய சாய் ராம்...
சுதர்சன் - சென்னை,இந்தியா
2010-11-23 16:44:58 IST
Dear Bhaghavan we seek your Blessings on your Day - Om Sri Sai Ram...
சுரேந் - CHENNAI,இந்தியா
2010-11-23 16:36:52 IST
அன்புள்ள ஸ்ரீ.சாய் பாபா சாமி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,இந்த நல்ல நாளில் எல் லோரையும் ஆசிர்வாதம் செய்யுங்கள்...
Bharathysridhar - chennai,இந்தியா
2010-11-23 16:34:24 IST
ஹாப்பி பர்த்டே பாபா...
R.நடராஜ sundaram - thiruvarur,இந்தியா
2010-11-23 16:04:13 IST
Aum ஸ்ரீ சாய்ராம்...
B.VELAYUDHAM - CHENNAI,இந்தியா
2010-11-23 15:51:59 IST
OHM SRI SAIRAM...
M.A.Shanmugam - Singapore,சிங்கப்பூர்
2010-11-23 15:50:02 IST
அன்பு இதயத்துக்கு பணிவான வணக்கம்.......
சிவா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-23 15:48:35 IST
பாபாவின் ஆசிர்வதம் எல்லாருக்கும் அவசியம் வேண்டும்...
ரமேஷ் - வேளச்சேரி,இந்தியா
2010-11-23 15:44:54 IST
ஸ்ரீ சத்யா சாய் பாபா avl, namaskaram . please bless us on this occassion...
செல்வகுமார் - சென்னை,இந்தியா
2010-11-23 15:41:18 IST
விஷ் யு எ ஹாப்பி பர்த்டே . வித் யுவர் ப்லசிங்க்ஸ் வி லிவ் அ மோரல் லைப்....
R. Lakshmanan - Chennai,இந்தியா
2010-11-23 15:39:17 IST
அன்புள்ள ஸ்ரீ.சாய் பாபா அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,இந்த நல்ல நாளில் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்........
robin - kumari,இந்தியா
2010-11-23 15:36:31 IST
‘மனிதனாகப் பிறப்பது பெரிய காரியமல்ல. மனிதனாக வாழ்வதே மிக முக்கியம்’ என்கிறார் கலீல் ஜீப்ரான். மனிதனாக வாழ்வது எப்படி என்கிறீர்களா? பிறருக்கு உதவும் உள்ளம் உடையவர்களே மனிதர்கள். முழுமையான மனிதர்கள்....
B.VELAYUDHAM - சென்னை.india,இந்தியா
2010-11-23 15:35:52 IST
many many more happy returns of tha day,ohm sri sathya sai ram...
கோபால் - சோழவந்தான்,இந்தியா
2010-11-23 15:35:28 IST
திஸ் news இஸ் super...
jayakumar - vellore,இந்தியா
2010-11-23 15:34:40 IST
you are the god of unique. Many more happy returns of the day. Bless all the living beings in the global....
srinivasan - olagadam,இந்தியா
2010-11-23 15:29:31 IST
ஹாப்பி பிரத் டே டு சாய் பாபா. ப்ளீஸ் கிவ் யுவர் blessings....
Sundra Gowsikan Gowry Mohan and others - BadenWuerttemberg,ஜெர்மனி
2010-11-23 15:24:12 IST
om sri sai ram ஹாப்பி பர்த்டே ஸ்ரீ சத்யா சாய் பாபா !!! மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஒப் தி டே !!! எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!! jai sai ram...
அருண் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-23 15:19:33 IST
OM SAIRAM லோக SAMASTHA SUKINOW BAVANTHU...
ச.சிவா - dindigul,இந்தியா
2010-11-23 15:17:13 IST
பாபாவுக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்... பாபாவின் அருள் மழை உலகம் உள்ளளவும் பொழியட்டும்.. சாய் சரணம்........
kanchana - sutton,யுனைடெட் கிங்டம்
2010-11-23 15:16:14 IST
ஹாப்பி பர்த்டே சுவாமி .உங்கள் பாதமே சரணம்....
மருதமுத்து.M - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-23 15:15:40 IST
ஓம் சாய்ராம்... ஓம் ஸ்ரீ சாய் பாபா இனிய பிறந்த நாள் வணக்கங்கள்!!!!! ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் சாய் ராம் ......
v chandrasekaran - Bangalore,இந்தியா
2010-11-23 15:10:59 IST
ஓம் சத்திய சாய் பாபா பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை வணங்குகிறேன்....
அற.Sudharshanan - Trichy,இந்தியா
2010-11-23 15:09:24 IST
டியர் பாபா விஷ் யு ஹாப்பி பர்த்தே டே....
VEERAMANI - chennai,இந்தியா
2010-11-23 15:03:56 IST
நல்ல செய்தி நமஸ்காரம் சுவாமிகளின் ஆசிர்வாதம் வேண்டுகிறேன் நன்றி...
கே வேலாயுத Raja - dubai,இந்தியா
2010-11-23 15:03:25 IST
இன்னும் பல்லாண்டு வாழ vaalthukkal...
சுப்ரமணியன் ப.சே - mumbai,இந்தியா
2010-11-23 15:00:18 IST
தங்களின் பரிபூர்ண ஆசிகளால் வாழும் பல கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.தங்கள் பல கோடி ஆண்டுகள் இருந்து மக்களை நல்ல நிலைக்கு எடுத்து செல்லுங்கள். எங்களின் பரிபூர்ண நமஸ்காரங்கள் தங்களின் பாத கமலங்களுக்கு சமர்பிக்கிறோம்....
v .sankar - சென்னை.saidapet,இந்தியா
2010-11-23 14:55:43 IST
many more happy returns of the day. aum sri sai ram...
SAM - Singapore,இந்தியா
2010-11-23 14:55:25 IST
எனது வணக்கங்கள். உங்கள் சேவையால் பலன் அடைந்துள்ளேன். உங்கள் சேவை தொடர பிரார்த்திக்கிறேன். ஓம் சாய்ராம்....
பார்த்திபன் - காஞ்சிபுரம்,இந்தியா
2010-11-23 14:55:12 IST
சத்ய சாய் அவர்களை வாழ்த்த வயதில்லை ! அவரை வணங்குகிறேன்!. தொடரட்டும் அவரின் மக்கள் பணி. பார்த்திபன் , காஞ்சிபுரம்,...
உமாசங்கர் கே - சென்னைஅண்ணாநகர்,இந்தியா
2010-11-23 14:47:54 IST
Om Sri Sai Ram. Pranams at the lotus feet of bhagwan Sri Satya Sai Baba... எண்ணற்ற ஏழை எளியோர் இவரால் பயன் அடைந்துள்ளனர்.ஆன்மிகத்திலும் மனித சேவையிலும் இவரின் தொண்டு அளப்பரியது.இவர் இந்திய நாகரீகத்தின் ஓர் கலங்கரை விளக்கம்.நீடூழி வாழ்க.... பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
அருன்ப்ரகாஷ்.P - PUDUCHERRY,இந்தியா
2010-11-23 14:41:07 IST
அன்புள்ள ஸ்ரீ.சாய் பாபா சாமி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,இந்த நல்ல நாளில் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்.........
viswanathan - Chennai,இந்தியா
2010-11-23 14:39:35 IST
ஹாப்பி பர்த்டே பாபா...ப்ளேசஸ் மீ அண்ட் மை பாமிலி எவர் ப்ளீஸ்........
ம.sankaran - chennai,இந்தியா
2010-11-23 14:29:10 IST
நீங்கள் மீண்டும் பல ஆண்டுகள் நீடுழி வாழ அருள்மிகு கற்பக விநாயகரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக