செவ்வாய், 23 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் ட்டப்படும் 1000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா



இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை மறுநாள் நான்கு நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.
யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக தமிழர்களுக்கு கட்டப்படும் ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா.  பின்னர் அவர் இலங்கை அதிபரை சந்தித்து தமிழர்களின் பிரச்சனை மற்றும் மீனவர்கள் பிரச்சனை குறித்தும் விவாதிக்கிறார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக பல்வேறு நிவாரண திட்டங்களை  இந்தியா மேற்கொள்கிறது.  இது தொடர்பாக வெளியுறுவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நான்கு நாள் பயணமாக 25ம் தேதி இலங்கை செல்கிறார்.
26ம் தேதி கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசுகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. 27ம் தேதி யாழ்ப்பாணம் செல்லும் அவர் அங்கு தமிழர்களுக்காக முதற்கட்டமாக கட்டப்படவிருக்கும் ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து தமிழர் பகுதிகள் தலைமன்னாரில் உள்ள 500 கிலோ மீட்டர் ரயில்பாதையையும் எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கிவைக்கிறார்.
ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு எடுக்கும்படியும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக