சனி, 20 நவம்பர், 2010

அடுத்த மகாராணி காமில்லா - ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இளவரசர் சார்லஸ்

முதன்முறையாக அடுத்த மகாராணி காமில்லா என்பதை பகிரங்கமாக அமெரிக்கா ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வேல்ஸ் இளவரசர் சார்லஸ். முன்பும் சார்லஸ் தன்னுடைய இந்தக் கருத்த்தை நெருங்கிய நட்பு வட்டாரத்திற்குள் மட்டும் தெரிவித்து வந்தார் என்ற போதிலும் கூட வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் இளவரசர் சார்லஸை பேட்டி கண்டுள்ளது. அந்தப் பேட்டியில் அடுத்த மன்னர் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
தான் மன்னராவது என்பது தன் தாயின் மரணத்தைக் குறிக்கும் விடயம் என்பதால் அது குறித்த சிந்தனையே தனக்கு இதுவரை வந்ததில்லை என இளவரசர் சார்லஸ் பேட்டியில் தெரிவித்துள்ளதுடன் மன்னராக வேண்டிய நிலை வரும் போது கமில்லா மகாராணியாக முடிசூட்டப்படுவார் என்பதையும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இளவரசர் சார்லஸ் கூறியுள்ள இந்த வார்த்தைகள் பக்கிங்காம் அரண்மனைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது. 2005 இல் இளவரசர் சார்லஸ் கமில்லாவை திருமணம் கொண்ட பின்னரும் கூட பிரிட்டன் மக்களை மத்தியில் டயானாவுக்கு இருந்த மதிப்பு கமில்லாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக