ஆனாலும் கொள்ளையர்கள், குறித்த இலங்கையரை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தனது தந்தையாரை கொள்ளையர்கள் மூன்று முறை கத்தியால் வயிற்றில் குத்தியதாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட பவுன்ஸ் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அயலில் உள்ளவர்கள் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்ட நேரத்தில் கடையினுள் இருந்து நால்வர் சந்தேகப்படும் விதமாக ஓடிச்சென்றார்கள் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கமராவை பார்த்த பொலிஸார் இருவரை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இருபது வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக