சனி, 20 நவம்பர், 2010

பிரபுதேவா மனைவி ரம்லத் தற்கொலை முயற்சி? தூக்க மாத்திரை

பிரபுதேவா மனைவி ரம்லத் அண்ணா நகரில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறார். அங்கு நேற்று அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததும் விரைந்து சென்று ஆஸ்பத்திரிக்கு தூக்கி போய் காப்பாற்றியுள்ளனர்.
பிரபுதேவா, நயன்தாரா மீது குடும்ப நல கோர்ட்டில் ரம்லத் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவனை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றும் நயன்தாரா அவரை வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார் என்றும் வழக்கில் குறிப்பிட்டு உள்ளார். இருவரையும் வருகிற 23-ந்தேதி நேரில் ஆஜராக சொல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் ரம்லத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ரம்லத் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக நெருக்கமானவர்கள் கூறினர்.
பிரபுதேவா இரு மாதங்களாக ரம்லத்தையும், குழந்தைகளையும் பார்க்க வீட்டுக்கு வரவில்லை. கோர்ட்டுக்கு போனதில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் அனுப்புவதையும் நிறுத்தி விட்டார். குழந்தையின் பிறந்த நாள் சமீபத்தில் நடந்த போது வருவார் என எதிர்பார்த்தார். ஆனால் பிரபுதேவா போனில் கூட பேசவில்லையாம்.
கடந்த ஒரு வாரமாக பிரபு தேவா சென்னையில்தான் இருந்தார். ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கும் “எங்கேயும் காதல்” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதற்காக அங்கு முகாமிட்டு இருந்தார்.    இதுபற்றிய தகவல் ரம்லத்துக்கு தெரிய வந்தது. தன்னுடன் பேசுவார் சமரச முயற்சியில் ஈடுபடுவார் என கருதினார்.   ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதுவும் அவரை நோகடித்தது.
இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நயன்தாரா தனது பிறந்தநாளை “கேக்” வெட்டி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக பிரபுதேவா படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இனி தன்னோடு சேர மாட்டார் என்று ரம்லத்துக்கு உறுதியாக தெரிய வந்துள்ளது.
நயன்தாராவை திருமணம் செய்வதிலும் பிடிவாதமாக இருக்கிறார். திருமணத்துக்கு பின் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளனர். அங்கு நடனப் பள்ளி ஆரம்பிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக புரோக்கர்கள் வைத்து வீடு பார்த்து வருகிறார்கள்.
ரம்லத் சட்டப்பூர்வ மனைவி அல்ல என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் வாதாடவும் பிரபுதேவா முடிவு செய்துள்ளாராம். திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்று பிரபு தேவா தரப்பினர் கூறி வருகின்றனர்.   பிரபுதேவாவின் இத்தகைய நடவடிக்கைகள் ரம்லத்தை தற்கொலைக்கு தூண்டியதாக இணைய தளங்களில் பரவியுள்ளது.
ஆனால் இச்செய்தியை ரம்லத் வக்கீல் ஆனந்தன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ரம்லத் தற்கொலைக்கு முயன்றதாக இணைய தளங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக