ஞாயிறு, 28 நவம்பர், 2010

இனிமேல் யோசிப்போம்... : தி.மு.க.,விற்கு கிடைத்த திடீர் தெம்பு


""நாங்கள் யாரிடத்தில் அன்பு செலுத்துகிறோமோ, அந்த அன்பைப் பிரித்து, அந்த நட்பை பலவீனப்படுத்தி, அதன் காரணமாக பொறுப்பில் இருக்கிற எங்களை விரட்டி விடலாம் என்று கருதுகின்றனர். நேரு குடும்பத்திற்கும், எங்களுக்கும் பகை இருப்பது போல் சில புல்லுருவிகள் கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

"நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில், 1970ம் ஆண்டிலேயே கவிதை எழுதியவன் நான். சோனியா உள்ளிட்டோர் இந்த கவிதையை படித்துப் பார்த்தால், எங்களது உணர்வு புரியும்'' கடந்த மாதம் 28ம் தேதியன்று லயோலா கல்லூரி விழாவில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு இது. "நாங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதிலே மத்திய அரசை விட்டு விட்டு செயல்படுத்துவதில்லை. அவர்கள் எட்டடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம். அந்த எட்டையும் கூட்டித்தான், 16 அடி என்பது எனக்குத் தெரியும். சேர்ந்தே 16 அடி பாய்வோம் என்று சொன்னபிறகுதான், அவர்களை நம்பி, சேர்ந்தேயிருக்கிறோம். சேர்ந்தே இருப்பது தீது என்று சொன்னால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்; அவ்வளவுதான் சொல்ல முடியும்' கடந்த 24ம் தேதியன்று சென்னையில் நடந்த விவசாய அலுவலர்கள் மாநாட்டில் முதல்வரின் ஆவேச பேச்சு இது. நேருவுக்கு கவிதையெழுதியதையெல்லாம் ஞாபகப்படுத்தி, உறவைத் தொடர வேண்டிய, "யாசிப்பு' நிலையில் இருந்து, ஒரு மாத இடைவெளியில், "யோசிப்பு' நிலைக்கு தி.மு.க., தலைமை மாறியுள்ளதை வெளிப்படுத்துகின்றன இந்த பேச்சுக்கள்.

காங்கிரஸ் நம்மை விட்டு விலகுகிறது; அ.தி.மு.க.,வுடன் அணி அமைக்க காய்கள் நகர்த்தப்படுகிறது என்ற சந்தேகம் சில மாதங்களாகவே தி.மு.க.,வுக்கு தொடர்ந்து வருகிறது. இந்த சந்தேகத்திற்கு உரம் போடுவது போல், "காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது' என ஜெயலலிதா அளித்த பேட்டியும், அடுத்த இரு நாட்களில் தமிழகம் வந்த சோனியா இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாய் திரும்பியதும் அமைந்தது. இதையடுத்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, "செக்' வைக்கப்பட்டது. "ராஜாவை விலக்குவதால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் ஆதரவு அளிக்கத் தயார்' என்று ஜெயலலிதா ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினார். இருந்தாலும், ராஜாவின் ராஜ்யத்தை பாதுகாக்க தி.மு.க., தலைமை கடுமையான முயற்சிகளை எடுத்தது.

"எக்காரணத்தைக் கொண்டும் ராஜா, ராஜினாமா செய்யமாட்டார்' என்று முதல்வர் கருணாநிதி உறுதியாக தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கொடுத்த, "பிரசர்' கருணாநிதியின் உறுதியைத் தகர்த்தது; ராஜாவின் ராஜ்யம் பறிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் நம்மை ஒதுக்குகிறதோ என்ற சந்தேகம் மீண்டும் தி.மு.க.,வை வாட்டியது. ஆனால், மத்திய அமைச்சர் அழகிரி மகன் திருமண விழாவில், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, "அடுத்த மூன்றரை ஆண்டுகள் கூட்டணி தொடரும்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் தி.மு.க., தலைமை நிம்மதியடைந்தது. ஆனால், இந்த நிம்மதியை குலைக்கும் வகையில், "சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என்று பிரணாப் சொல்லவில்லையே' என்று காங்கிரஸ் தரப்பிலேயே பேச்சு எழ, மீண்டும் குழப்பம் தொடர்ந்தது. இதற்கிடையே, நேரு காலத்தில் துவங்கி, காங்கிரசோடு கழகம் பின்னிப் பிணைந்த வரலாற்றை சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே வந்தார்.

"தி.மு.க., உறவை ராகுல் விரும்பவில்லை. தனது தமிழக பயணத்தின்போது, தி.மு.க., தலைவரை ஒரு முறை கூட சந்திக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி அமைத்து போட்டியிட ராகுல் விரும்பகிறார். இதை இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை மற்றும் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன் மூலம் அவர் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்' கூட்டணி விவகாரத்தில் டில்லி காங்கிரஸ் தலைவர்களால் எவ்வளவோ உறுதிகள் தந்த நிலையிலும், தி.மு.க., தலைவருக்கு நம்பிக்கை ஏற்படாததற்கு இவையே காரணமாக முன்னிறுத்தப்பட்டன. இந்த தொடர் நிகழ்வுகளில், "லாஜிக்' இருப்பதாலும், சமீபத்தில் நடந்த வடமாநில தேர்தல்களில் ராகுல் எண்ணப்படியே தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது போன்றவற்றை காங்கிரஸ் மேற்கொண்டதால் தி.மு.க.,விற்கு உறுத்தல் தொடர்ந்தது. குறிப்பாக, பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், கணிசமான இடங்களை பெறுமானால், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி உடையும் என்ற கருத்து பலப்பட்டிருந்தது. இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் படுபாதாளத்திற்குப் போனதால் தி.மு.க., தலைமை தெம்பானது. "இனிமேல் தமிழகத்தில் காங்கிரசுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை' என்ற தெம்பின் வெளிப்பாடுதான், "யாசிப்பு' நிலையில் இருந்த தி.மு.க.,வை, "யோசிக்க' வைக்கும் அளவுக்கு போர்க்குரல் எழுப்பச் செய்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியன் - Chennai,இந்தியா
2010-11-28 18:43:21 IST
டியர் காங்கிரஸ், கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. திமுக கூட சேர்ந்து வெற்றி பெறுவதை விட, வீரன் மாதிரி மார்பில் அம்பு வாங்கி தோற்பதே மேல்....
panneer - uae,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 16:52:03 IST
இப்பதான் உழல் வெளிய வந்துடுச்சு உரையாடல்னு இன்னுமா திமுக நம்பரிங்க மக்களை திருந்துங்க...
kismath - doha,இந்தியா
2010-11-28 16:50:53 IST
அய்யா என்னோம்மோ சரி ஆகமொத்தம் இந்டியாவுடையா எகோநோமிய்யை சீற்குளைக்கிரீர்கள் தயவு செய்து கொஞ்சம் யோசெனெய் செய்யுங்கள் நீங்களும் இந்தியன் என்று? நண்றி....
KARTHICK - madurai,இந்தியா
2010-11-28 16:23:28 IST
iyya ungal oolal podhum ....... ENGAL CHINNAM IRATTAI ILAI . . . UNGAL CHINNAM ATCHI KAVILUM ENRA OLAI .....
இபு பாரிஸ் - SARCELLES,பிரான்ஸ்
2010-11-28 16:17:10 IST
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.ஒட்டு போடும் போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள்....
தமிழன் - UAE,இந்தியா
2010-11-28 15:52:25 IST
DMK விட்டு காங்கிரஸ் போனாலும் இப்ப தமிழக election ,ஆனால் தமிழகதில் மீண்டும் DMK வரும் ஆனால் காங்கிரஸ் மத்தியில் பார்லிமெண்டை மறைமுகமா கலைப்பதே ADMK ஜெயலிதா அம்மையாரின் முக்கிய வேலை மீண்டும் மத்தியில் பிஜேபி வரவேண்டும் தமிழன்...
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
2010-11-28 15:49:17 IST
Even in bihar a state where literacy is very low but people now got knowledge to reject the corrupt government. But in TN comparatively a high educated state people should be ashamed of have this family smuggling party still in power. Making the people lazy with all free biscuit stuff's and not allowing them to progress mentally. Are we becoming worse than Bihar?...
Raja - Nagercoil,இந்தியா
2010-11-28 13:44:02 IST
பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என சட்டசபையில் மார் தட்டிக் கொள்ளும் திமுக, அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் TSS, SSS, LSS என ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்குகிறது. பிற மாவட்டங்களில் கண்டம் ஆன பேருந்துகளை இங்கு இயக்கி லாபம் சம்பாதிக்கிறது. உதாரணமாக 25 கி.மீ தூரத்திற்கு 12 ரூபாய் கட்டணம், அதுவும் கண்டம் ஆன பேருந்தில். இவர்களுக்கு ஒரு முடிவு காலம் வர வேண்டும்....
திராவிடன் - மதுரை,இந்தியா
2010-11-28 13:43:27 IST
திராவிடம் சொல்லி சொல்லி பதவி கொண்ட தலைவர் ஆரியருக்கு துதிபாடி அன்பு செலுத்தினாரா..! எப்படி..?ஏன்..?எதற்கு..?திராவிடனை முட்டாளாக்குகிறார் என ஒப்பு கொள்கிறாரா?விரைவில் அறிக்கை வரும். ஏழை திராவிடனுக்கு கல்விகற்க உதவித்தொகை வழங்காததால் ஆரிய கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று...! அதனால் தான் திராவிடம் பேச வீரமணியை களம் இறக்கி உள்ளார். ஏழை திராவிடனின் குழந்தைகள் கல்வியை காக்க இன்னொரு காமராஜாயி களம் இறங்கியுள்ள திராவிடந்தான் ஏழை திராவிட தலைவன்....
எ.JEYASEELAN - kuwait,இந்தியா
2010-11-28 13:42:02 IST
ஜவஹர்லால் நேஹுரு avarkalaipptri பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை ஏன் என்றல் , நீங்கள் இந்திரா காந்தி அவர்களை எவ்வளு கொட்சைப்படுத்திப்பெசிநீர்கள் என்பது நாட்டு மக்களுக்குத்த்ரியும், உங்களுக்குகாரியம் ஆகவேண்டும் எதஊம் செய்வீர்கள்...
அப்துல் ரஹீம் அய்யம்பேட்டை - அய்யம்பேட்டை,இந்தியா
2010-11-28 13:41:40 IST
தி மு க காங்கிரஸ் கூட்டணியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது தி மு க ஆச்சி ரொம்பவும் சிறப்பாக உள்ளது இரண்டு குறைகள் உள்ளன 1 மின்சார தடை 2 விலைவாசி ஏற்றம் இந்த இரண்டையும் சரி செய்து விட்டால் போதும் தி மு க ஆச்சியை யாராலும் அசைக்க முடியாது...
அப்துல் ரஹீம் - அய்யம்பேட்டை,இந்தியா
2010-11-28 13:27:44 IST
நல்லாட்சி செய்ய வேறு யாரு இருக்கிறார்கள் தமிழ் நாட்டில்...
manivannan - டர்எஸ்சலாம்தன்சானியா,தான்சானியா
2010-11-28 13:03:30 IST
அய்யா நீங்கள் லயோலவிழவிலும் சரி வி ஐ ட்டி விழாவிலும் சரி ஏன் அரசியலை பேசி மாணவ சமுதாயத்தையும் பெருமை வாய்ந்த கல்விக்கூடங்களையும் இழுவுபடுதுகிரீர்கள்? உங்கள் உடன்பிறப்பு திருமணம், காதுகுத்து மற்றும் கருமாதி கூட்டங்களில் இனிமேல் இதை பேசவும் எதை எங்கு பேசுவது என்று எந்த உடன்பிரப்பாவது எடுத்துரைக்குமா...
ஸ்ரீதர் - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 12:56:24 IST
எய்பவனுக்கே காலம்...
மணி - சிங்கப்பூர்,இந்தியா
2010-11-28 12:31:25 IST
இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் நாடு பேரா கூட மாத்திடுவாங்க "தி மு க நாடு" னு. எல்லாம் மக்கள் பணம், மக்கள் சொத்து. அடிமை மக்கள்..ஆனால் இனிமேல் ஏமாத்த முடியாது......
உண்மை - Chennai,இந்தியா
2010-11-28 11:41:07 IST
திமுக அடுத்த ஆட்சி அமைப்பது கடினமே. மக்கள் சற்று தெளிவு பெற்றுவிட்டார்கள்....
poosaidurai - Bahrain,இந்தியா
2010-11-28 11:04:24 IST
வலுவான கூட்டணியை உருவாக்குவதன் மூலம் யாரும் எதிர்பார்க்காத நல்ல திட்டங்களை முன்னிறுத்தி குறைகளை திருத்தி தகுதியானவர்களை வேட்பாளராக பரிந்துரை செய்தல் தி.மு.க கூட்டணி மீண்டும் வெற்றிநடை போடும். பயம் வேண்டாம் முதல்வருக்கு....
தமிழ் செல்வன் - chennai,இந்தியா
2010-11-28 11:00:36 IST
பீகார் இல் ஊழல் மன்னன் லல்லுவுக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் நடந்த கதிதான் கருணாநிதிக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் நடக்க போகிறது. காங்கிரஸ் தேசிய கட்சி அது அச்செம்ப்லி எலேச்டின் பற்றி கவலை பட தேவை இல்லை. ஆனால் காங்கிரஸ், பீகார் இல் லல்லுவை நாசம் செய்துவிட்டது. அது காங்கிரஸின் பெரிய சாதனை. அடுத்த ஏலேக்டயொனில் பீகாரில் கதை வேறு....
nizamudeen mohammed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 10:57:11 IST
Nehru kaalathil congreesodu kazhgam pinni pinainthu, inthira kaalathil kolai seyum alavirku valarnthu, rajiv kaalathil pirinthu, ippo sonia kaalathil inaiyuma piriyuma endru iruppathaiyum gnapapadithikkolgiraro....
சாமி - MUSCAT,ஓமன்
2010-11-28 10:50:48 IST
முக பேசறத பார்த்தா, காங்கிரஸ் கிட்ட பிச்ச எடுக்க மாதிரியே தோணுது....
தமிழ்செல்வன் - chennai,இந்தியா
2010-11-28 10:48:57 IST
லட்ச கோடிகளுக்கு மேல் ஆட்டையை போட்ட மஞ்ச துண்டுக்கு தெம்பு !! மக்கள்,சுப்ரீம் கோர்ட்,சிபிஐ கொடுக்க போவது ஆப்பு !!...
வம்பன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 10:42:01 IST
திமுக காங்கிரஸ் தலை(மை)யுடன் நேரடி தொடர்பில் இருக்கும் போது ராகுலுடன் என்ன பேச்சு வேண்டிகிடக்கின்றது. கலைஞரின் அனுபவத்தின் முன் ராகுல், அம்மு எல்லாம் கொசு. காங்கிரஸ் திமுக உறவு முறியபபோவது இல்லை. பிரதமருக்கும் சோனியாவிற்க்கும் உறுதியாகவே தெரியும் திமுக கை கொடுத்தல் அது உறுதியாகவே இருக்கும். தற்போதைய நிலையில் காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு வழி இல்லை....
நரேந்திரன் சிவா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 10:41:48 IST
இது வெறும் காமடி பீசுப்பா.............இவா பெசுறேதேல்லாம் காதிலே போடப்பிடாது.......அய்யயோ அம்மா எல்லாருக்கும் ஐயா குட்டு தெருஞ்சுருச்சே.........
சமீர் - சென்னை,இந்தியா
2010-11-28 10:36:15 IST
Sir, what is happening is the power struggle. a group of congress men who is interested in power and recognition wanted to join AIADMK alliance . The congress men who wanted to maintain the respect to the party wanted DMK. The congress men who talk about Kamaraj rule in Tamil Nadu is for the name sake and, trying to fool around. Rahul tactics could have worked a bit at UP. But, it failed in Bihar and WB. Rahul need to learn a lot. Today Prab Mukerjee is the senior person who is respected by every politician and Rahul need to learn a lot from him. Rahul is right that he need more time to become PM. Let the people of India decide. Rahul did not visit Karunanidhi during his visits. He neither visited Karuna nor Jaya so Rahul is not the main in this issue. Today congress is facing too much of problems in most of the state. Andra, Bihar, WB, Gujarat etc. But, congress do not study what is the real cause for that? I dont think congress is doing anything for the party but, the congress men wanted only power but do not build the root level....
மணி - புனே,இந்தியா
2010-11-28 10:27:36 IST
இந்த பெரிசு காங்கிரஸ் பின்னாலே அலையுரதுக்கு ஒரே காரணம் மத்தியில் அச்சியில் உள்ள கட்சியுடன் கூட்டு இருந்தால் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு காசு பணம் கொடுக்கலாம் தேர்தல் முடிவுகளையே கூட மதி அறிவிக்கலாம் யாரும் கேட்க்க முடியாது எதிர் கட்சிகள் என்ன தான் முயற்சி செய்தலும் மத்திய அரசும் அதை கண்டு கொள்ளாது.ஆதிமுகா வும் இதனால் தான் காங்கிரஸ் கூட்டணியை நாடு கிறது. போன லோக்சபா தேர்தலில் சிதம்பரம் வெற்றியையும் டிஎம் கே இதுவரை நடந்த அணைத்து தேர்தல்களிலும் காசு கொடுத்ததை எந்த ஒரு குப்பனாலும் கேட்கவோ தடுக்கவோ முடியாததும் ஒரு உதாரணம் ஆகும். தேர்தல் கமிஷன் வெறும் கண் துடைப்புதான் ஒட்டு எந்திரத்தில் கூட இவர்கள் தில்லு முள்ளு செய்துதான் இவர்கள் ஜெயித்துள்ளனர். எனவே தான் ஏ டி எம் கே வும் டி எம் கே வும் காங்கிரஸ் பின்னல் சுத்துகின்றன. எனவே மக்களே நீங்கள் திருந்தினால் மட்டுமே நம் தமிழகத்தை அடுத்த தேர்தல் மூலமாக நாம் காப்பாற்ற முடியும்....
பாரதி தாசன் - Ch,இந்தியா
2010-11-28 09:50:53 IST
சராசரி மக்களின் இப்போதைய மனநிலை என்னவென்றால் ஐந்து வருடம் தி மு க ... ஐந்து வருடம் அ தி மு க. எனவே வரும் தேர்தல்அ தி மு க.க்கு சாதகமாக அமையும். அடுத்த சுற்று தி மு க. மற்றபடி நல்ல திட்டங்கள், சாதனைகள், ஊழல் எல்லாம் இரண்டாம் பட்சம் என்பதுதான் உண்மை. இதை எல்லா தலைவர்களும் உணர வேண்டும். இது கேரளம, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள்ளுகு மிக பொருந்தும்....
mathiRathi - dubai,இந்தியா
2010-11-28 09:28:17 IST
நல்ல முடிவு எடுங்கள். உங்கள் முடிவு தமிழ்நாட்டு மக்களுக்கு நற்பலன் கிடைக்கவேண்டும். மதிரதி. துபாய்....
Govind - Delhi,இந்தியா
2010-11-28 09:26:54 IST
மு க காங்கிரஸ் உறவு பற்றி ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுவதே உள்ளு குள்ள ரொம்பவே நடுங்கி கொண்டு இருகிறார் என்பதை காட்டுகிறது ..மத்தியில் உருக்கும் காங்கிரசுக்கு இவருடைய 20 எம் பி க்கள் தேவை இல்லை ...உண்மை என்னவென்றால் இவருக்கு தான் அவர்கள் தேவை ..இவர் தமிழ் நாட்டில் செய்த அக்கிரமங்களை அவர்கள் வெளியே பேசினால் இவர் பாடு திடாட்டம் தான் . உதாரணத்துக்கு இந்த உறவு முடிவு பெற்று விட்டது என்று வைத்து கொள்வோம் ...உடனே இவர் மத்தியில் உள்ள தி மு க மந்திரிகளை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் ...பிறகு கொள்ளையடித்த விவரங்களை காங்கிரஸ் புட்டு புட்டு வைக்கும் அது தமிழக தேர்தலை பாதிக்கும் ..கண்டிப்பாக தி மு க தோற்கும் சில நாட்களுக்கு முன்னர் CAG அறிக்கையில் தமிழ் நாட்டில் பிற்படுத்த பட்ட மக்களுக்கு மத்திய அரசாங்கம் செய்யும் உதவிகளை தி மு க வேறு பல திட்டங்களுக்கு செலவு செய்ததை பற்றி விவரமான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பற்றி பேசினால் தி மு கவினர் எங்கே போய் தங்கள் முகத்தை மறைத்து கொள்வார்கள் ...இவருடைய இலவச திட்டங்களுக்கு எல்லாம் காங்கிரஸ் உதவி இல்லாமல் ஒரு மாத கூட அரசாங்கம் நடத்த முடியாது ...பாவம் மஞ்ச துண்டு புலம்புவதை தவிர ஒன்றும் செய்ய முடியாது...
T.Rajendran - Dindigul,இந்தியா
2010-11-28 09:24:10 IST
Your reporter is always trying to project Rahul as a superman, even after Bihar results. The position of TN will be no better than Bihar, if Congress goes alone. JJ is not a dependable partner to any party including Congrss, BJP, Communist parties and so on. Let political novice like Karthik Chidambaram know it....
sankaran - Chennai,இந்தியா
2010-11-28 08:29:08 IST
ஓஹோ! எட்டும் எட்டும் பதினாறா? இப்போது தான் புரிகிறது. உங்களுக்கு எண்பதாயிரம் கோடி அவர்களுக்கும் எண்பதாயிரம் கோடி, மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி. விளக்கத்துக்கு நன்றி. சேர்ந்தே இருங்கள். அப்போது தான் சேர்த்தே இருவரையும் ஒழிக்க முடியும்....
சேதுபதி - chennai,இந்தியா
2010-11-28 08:21:03 IST
இவர்கள் என்ன யோசிப்பது .மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர் .ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் தி.மு.க.வைக் காட்டிலும் நாடு தழுவிய அளவில் காங்கிரசிர்க்கே தலை குனிவு.திமு.க .,காங்கிரஸ் உறவு தொடர வேண்டும் .இரண்டையும் சேர்த்து மக்கள் தண்டிக்க வேண்டும் ....
iindian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 08:08:15 IST
சரிதான்!! ரெண்டு கட்சி மேலிடமும் ஊழலில் வசமா மாட்டியிருக்கு! அது தான் இந்த இழுபறி! ஜெயில் களி நெறைய ரெடி பண்ணுங்க!...
பாபு - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-28 07:53:09 IST
அட போங்கடா நீங்களும் உங்க கொள்கைகளும்.... முட்டாள் தமிழ் மக்கள் இருக்கும் வரை இவங்கதான் ராசா .... !!! ஸ்பெக்ட்ரம் ராசா ...!!! சேது சமுத்திரத்தில் போட்ட காசு என்னாச்சு ??? அரசு கேபிள் என்னாச்சு ??? இலவச நிலம் என்னாச்சு??? எவனுக்கும் கவலை இல்லை .. சோறு கண்ட இடமே சொர்க்கம் என்ற மனநிலையில் மக்களை இலவசம் என்று மயக்கி அழிவு பாதைக்கு கொண்டு சென்றவர் இதே கருணாநிதி. தமிழை கேடயமாக பயன்படுத்தி தமிழ் இனத்தை கொடிய முறையில் சதி செய்து அழித்தவர் என்று சீமான் முதலிய எல்லோராலும் போற்றி புகழ படும் ஒரே தலைவர் இவர்தான் . காமராசருக்கே போட்டியாக வள்ளல் என்ற பட்டம் யாராவது இருந்தால் இவருக்கு தந்து விடுங்கள். தள்ளாத வயதிலும் ஊழல் செய்து கின்னஸ் சாதனை படைக்க துணிந்த இந்த கொடுங்கோல் முதல்வர் தமிழகத்தை சோமாலியா வாக மாற்றும் வரை ஓயாபோவதில்லை. மறதி பிடித்த மக்களே .... இனியும் தூங்கதீர்கள் ... இவங்களால் உங்க ஜட்டி கூட உருவப்படும் .. ஜாக்கிரதை !!!!...
சங்கர்.ப - தேனி,இந்தியா
2010-11-28 07:45:04 IST
காட்டில் அடிபட்ட/நோய்வாய் பட்ட மிருகங்களைத்தான் அதை விட இளைத்த மிருகங்கள் அடிக்கக் காத்திருக்கும், ஆறறிவு கொண்ட மனிதன் இங்கு பணத்தை கொள்ளையடிப்பதற்க்காக போடும் திட்டம்தான் இப்படி கேவலப் பட்டு நிற்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை ஸ்பெக்ட்ரம் ராசாவை காங்கிரசால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அது போல் யுவராஜ் மற்றும் இளங்கோவனின் அமிலப் பேச்சுகளை திமுகாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, இப்போது வேறு வழியில்லை என்று ஸ்பெக்ட்ரம் ராசாவின் அலைவரிசையை கட் செய்ததால் மஞ்ச துண்டு இப்படி பொறுமுகிறார். உண்மையிலே பீகார் காங்கிரசை தூக்கியிருந்தால் இன்னேரம் இங்கு டைவர்ஸ் ஆகியிருக்கும். ராகுலின் லேட்டஸ்ட் பார்முலா தோல்வி, அதனால்தான் இங்கு மஞ்ச துண்டுக்காரர் புதிய மஞ்ச துண்டை போட்டுக்கிட்டு முறுக்கிக்கிட்டு நிக்கிறார். எப்படியாயினும் இன்னுமொரு கிரைண்டரோ, மிக்ஸியோ அல்லது வீட்டுக்கு தினம் ஒரு குவாட்டர் திட்டமோ கண்டிப்பாக திமுகாவை கரையேற்றும்......
கே.வெங்கட் - ஹைதராபாத்,இந்தியா
2010-11-28 07:29:42 IST
தமிழக பெரிய குடும்பத்திற்கு பிரச்சினை வரும்போது திராவிடர் நலம் / தமிழர் நலம்/ உரிமை/தன்மானம் என்ற பெயரில் பிரிவினை வாதங்கள் வளர்வது உறுதி.. தற்போதய நிகழ்வுகள் அதைதான் பிரதிபலிகின்றது...
சப்பாணி - n,இந்தியா
2010-11-28 07:24:50 IST
யோசிக்க ஒன்னும் இல்லை ........எல்லாம் முடிந்து விட்டது .........மக்கள் உன்னையும் ,உன் குடும்பத்தாரையும் ....முக்கியமாக உன் குடும்பத்தாரை தூக்கி அடிக்கணும் என்று முடிவு செய்து விட்டனர் ..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக