திங்கள், 29 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரமா? தேர்தல் அறிக்கையா? சட்டசபை தேர்தலை கலக்கப்போவது எது?

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஏதாவது ஒரு அலை வீசும். அது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவோ அமையும். ஆளுங்கட்சிக்கு எதிராக அலை வீசும் சூழலை, எதிர்க்கட்சிகள் "கண்கொத்தி பாம்பாக' பார்த்துக் கொண்டிருக்கும். வலுவாக ஏதாவது விஷயம் சிக்கிவிட்டால், அதை ஊதி, ஊதி ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும்.அந்த வகையில், நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி, ஓட்டு கேட்பதற்கு ஆளும் தி.மு.க., திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென வெடிகுண்டுபோல் வெடித்துள்ள, "ஸ்பெக்ட்ரம்' விவகாரம், அ.தி.மு.க., வுக்கு, "அல்வா' போல் சிக்கியுள்ளது.

தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தேசிய அரசியல் வரை மிகப்பெரிய அதிர்வலையை, "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் ஏற்படுத்தி விட்டது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி சம்பந்தப்பட்ட இந்த சம்பவத்தில், மத்திய அரசின் தலையில் சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துள்ளது, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும், இந்த விவகாரம் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை கவிழ்த்துவிடுமோ என்ற அச்சம், அந்த முகாமில் இருப்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது, "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை வைத்து, தி.மு.க., அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் ஸ்பெக்ட்ரம் பிரசாரத்திற்கு, சுப்ரீம் கோர்ட் பிரதமருக்கு வைத்த குட்டு, சி.பி.ஐ.,யில் அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் கை கொடுக்கும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இடைவெளி உள்ள நிலையிலேயே, எதிர்க்கட்சிகள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி வருகின்றன. தேர்தல் நேரத்தில் இது உச்சக்கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக, தமிழரின் பெருமைக்கு நாடு தழுவிய அளவில் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று தற்போதே எதிர்க்கட்சிகள் பேசத்துவங்கிவிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் ஒரு பேட்டியில்,"நாட்டின் முதல் பட்ஜெட்டை வெளியிட்ட சண்முகம் செட்டியார் ஒரு தமிழன்; பசுமை புரட்சியை ஏற்படுத்திய சி.சுப்ரமணியம் ஒரு தமிழன்; இளைஞர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு தமிழன். தமிழனுக்கு இதுபோன்ற இன்னும் பல பெருமைகள் உள்ள நிலையில், நாட்டில் இதுவரை நடந்த ஊழலில் அதிகபட்ச தொகையாக ஸ்பெக்ட்ரம் ஊழலை குறிப்பிட்டு, இதற்கு சொந்தக்காரரும் ஒரு தமிழன் தான் என்ற கரும்புள்ளியை ஆளும் கட்சி ஏற்படுத்திவிட்டது' என்றார்.இதனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்த தேர்தலில் தி.மு.க., எதிர்கொள்ள உள்ளது. எதிர்க்கட்சிகள், இம்முறை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தும் என்பது, மூத்த அரசியல்வாதியான முதல்வர் கருணாநிதிக்கு தெரியாத ஒன்றல்ல. எனவே, எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகத்தை எதிர்கொள்ள தி.மு.க.,வும் தயாராகி வருகிறது.இதை மெய்ப்பிக்கும் வகையில், சமீபத்தில் துணை முதல்வர் ஒரு கருத்தை வெளியிட்டார்.

"கடந்த தேர்தலைப் போல், வரும் தேர்தலிலும் தேர்தல் அறிக்கை தான் தி.மு.க.,விற்கு கதாநாயகனாக விளங்கும்' என அவர் பேசியிருப்பது, எதிர்த் தாக்குதலுக்கு தி.மு.க., தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. ஊழலைத் தாண்டி மக்களை ஓட்டுப் போட வைக்கும் அளவுக்கு தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் தேர்தலின் போது, இலங்கைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இது ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்துவிட்டன. அதுபோலவே, இம்முறையும் எதிர்க்கட்சிகளின் ஸ்பெக்ட்ரம் பிரசாரம் பிசுபிசுத்துவிடும் என்று ஆளுங்கட்சி பிரமுகர்கள் உறுதியாக கூறுகின்றனர். கருத்து பலவேறாக இருப்பினும், தேர்தலில், ஹீரோவாகப்போவது தேர்தல் அறிக்கையா; ஸ்பெக்ட்ரம் விவகாரமா என்பது மே மாத மத்தியில் தெரிந்துவிடும்.

"ஸ்பெக்ட்ரம் சீரியஸ்' : பார்லி தேர்தலில், இலங்கைப் பிரச்னை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். சாதாரண மக்களிடம் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் அப்படி இல்லை. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு நஷ்டம் என்று வெளியாகியுள்ள ஆதாரமான தகவல், மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, இலங்கை தமிழர்கள் பிரச்னை போல், ஸ்பெக்ட்ரம் பிரச்னையை அவ்வளவு சுலபமாக ஆளும்கட்சியினரால் மூடி மறைக்க முடியாது. அதுமட்டுமல்ல, அதிகரித்துள்ள விலைவாசி, மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, அமைச்சர்களின் வாரிசுகள் போட்டி போன்றவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இம்முறை எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தை, முன்னைப் போல் ஆளும் கட்சி அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியாது.
வேலன் - Cehnnai,இந்தியா
2010-11-29 14:58:06 IST
ஏன்பா எல்லாம் கொஞ்சம் யோசிங்க......இந்த ஊழல் நடக்கலனா...அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் தான் ஏத்துவாங்க....பெட்ரோல் விலைய குறைக்கவாபோறாங்க....??????? ஏழை மகளுக்கு வோட்டுக்கு 1000 ரூபா கிடைக்குமா...??????????.... எலச்சன் நேரத்துல நமக்கு குடுபார்...விடுங்கப்பா..........
செந்தில் - மதுரை,இந்தியா
2010-11-29 14:16:51 IST
சிறப்பு நிருபருக்கு ஓன்று சொல்ல கடமை பட்டு உள்ளேன். அது ஏன் என்றால், ஒரு நாள் இணைய தளத்தில் "திமுக கவுன்சிலர் மகனால் சென்னை ஸ்தம்பித்தது" என்று.அதாவது திமுக கவுன்சிலர் மகன் ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக ஒரு வதந்தியை பரப்பி அந்த வதந்தி தினமலரில் வந்தது. சென்னை முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. இது நடந்து ஒரு மாதம் கூட முடியவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் தேர்தலில் அந்த சம்பவதுக்கு காரணமான திமுக ஆதரவு பெற்ற சங்கம் தான் வென்றது. இதிலிருந்தே தெரியவில்லை. எந்த கட்சி வரும் பொது தேர்தலில் வெற்றி பெரும் என்று?? என்ன சிறப்பு நிருபர்.. நீங்க இப்போ சிரிப்பு நிருபர்..ஹி ஹி ஹி.....
manikandan - மேல்அருங்குணம்.பண்ருட்டி,இந்தியா
2010-11-29 14:09:46 IST
யாரு ஜெயிச்சாலும் கஷ்ட பட போறது நாம்தான். சரி பொறுத்திருந்து பாப்போம்?????????????...
சந்திரமௌலி - சென்னை,இந்தியா
2010-11-29 14:00:30 IST
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சோனியாவின் சகோதரிகளுக்கு ரூபாய் முப்பத்திஆறாயுரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி கூறுகிறார். இதைப்பற்றி விசாரணை நடைபெறுவதாக தெரியவில்லை. மேலும் இப்படி ஒரு செய்தி வந்துள்ளதை ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன. இது இந்த நாட்டிற்க்கு நல்லதல்ல. ராசா பிரதமரின் அறிவுரை சட்டத்துறை அறிவுரை நிதித்துறை அறிவுரை எல்லாவற்றையும் மீறி செயல்பட்டுள்ளார். இப்படி செய்தால் தனக்கு பிரச்சனை வராது என்ற தைரியம் கொடுத்தது யார் வாசகர்களே சிந்தியுங்கள் இந்தநாட்டில் பிரதமருக்கு தனது மந்திரிசபையை தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை பிரதமர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் என்றநிலை இந்தநாட்டின் எதிர்காலாத்திற்கு நன்மை செய்யாது...
Balshree - Gurgaon,இந்தியா
2010-11-29 13:39:39 IST
Chandra, Denver யு எஸ் ஏ first of all Mundra is not a port scam. Like MK you are also trying to display a shallow or no understanding of the Mundra case. Haridas Mundra was an industrialist and a stock broker – speculator form Calcutta. Mundra colluded and made LIC invest in shares in some loss making companies where he too had investments. At that time 1957-58 this investment was in the range of 1-1.5 Cr. Eventually LIC lost this money. TTK was finance minister then. This issue was raised by Feroz Gandhi (Indira’s husband), some people say to embarrass Nehru. Anyway, in those days Feroz Gandhi was fighting against corruption. Govt was forced to order an enquiry and a one man committee under retd. Bombay high court judge Justice Chagla was appointed. A public enquiry was held. It was found in the public enquiry that the then Finance Secretary and some LIC officials colluded to make this investment without passing through the LIC investment committee. TTK also testified and tried to distance himself from the decisions of the finance secretary and LIC officials. But Justice Chagla held TTK also responsible as a constitutional head, rightly so, and TTK had to resign. Mundra was arrested and sent to prison. Even as per MK, press in TN at that time was raking up the issue to make TTK resign. The whole enquiry was completed within a month. How does this compare with the 2G scandal, where Raja was a protagonist of the historic scandal and a likely beneficiary, along with family members of MK, of huge bribe. MK is mischievously trying to raking up caste issue with the gullible TN people as many do not know or talk about facts. Major loss of revenue to the govt. is loss for poor people. That is the issue....
S.MANI KANDAN - NEWDELHI,இந்தியா
2010-11-29 13:36:37 IST
When i am thinking 2G,I feel 11KV CURRENT PASS IN MY BODY...
thirukuvalai theeyasakthi - chennai,இந்தியா
2010-11-29 13:11:45 IST
Ellorukkum ilavasa pant, shirt, sari, blouse, body. Elavasa arisi, kodumai, maligai, kaaigari. elavasa LCD tv, DVD player. Elavasa bike, elavasa petrol, elavasa bus pass. Elavasa mathu banam........mm. mm.. moochu vanguthu. appurama solren....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-11-29 12:01:54 IST
உங்கள் சிறப்பு நிருபர் கற்பனையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள்,வரும் பொது தேர்தலில் திமுக தான் வெல்லும் என்பதற்கு போக்குவரத்து சங்க தேர்தல் ஒரு எடுத்து காட்டு. என்ன தான் எதிர் கட்சிகள் ஸ்பெக்ட்ரம் விகாரத்தை ஊதி பெரிது படுத்தினாலும் திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஏன் என்றால் தற்போது தமிழ் நாட்டில் உள்ள ஏழை மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். பணக்காரர்களை விட ஏழைகள் தான் அதிகம் நம் நாட்டில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் நாட்டில். அவர்கள் ஒட்டு அனைத்தும் திமுக-விற்கே. சிறப்பு நிருபர் அவர்களிடம் ஒரு கேவி கேட்க விரும்புகிறேன், தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது, அப்படி இருந்தும் எப்படி திமுக போக்குவரத்து சங்க தேர்தலில் 75% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது. அனால் எதிர்கட்சிகள் திமுக வாங்கிய ஓட்டுகளில் 30% ஓட்டுகளை கூட அடுத்து வந்த கட்சிகள் வாங்க வில்லை. இதே தான் வரும் பொது தேர்தலிலும் நடக்கும். அதிமுக 3 ஆம் இடத்துக்கு போனாலும் போகலாம். அதுவும் 3 கட்சிகளின் ஆதரவு சங்கம் ஆதரவு கொடுத்த பிறகும் 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதிமுக வரும் பொது தேர்தலில் மரண அடி வாங்கும். அது உண்மை. இன்றைய தேதிய போட்டு குறித்து வைத்து கொள்ளுங்கள். இது கண்டிப்பாக நடக்கும். பின்னாளில் நான் சொல்லுவது உண்மையாக நடக்கும். அப்போது தினமலர் சிறப்பு ஆசிரியர் எனக்கு ஒரு மின்னஞ்சல்(mail) அனுப்பலாம். வாழ்க தமிழ்.வளர்க கலைஞர் தொண்டு!!!!!...
soundararaj - chennai,இந்தியா
2010-11-29 12:00:36 IST
சுவாதி, மக்கள் முன்னேற்றத்திற்கு வாக்களிக்கவில்லை. கோழி பிரியாணி & RS 500 to 1000 . நம் மக்கள் நன்றி மறவாதவர்கள். தலைவராவது இவ்வளவு காசு கொடுக்குறார்; அந்த அம்மா என்ன கொடுத்தாங்களா. நான் எல்லாரும் அப்படி என்று சொல்ல வில்லை. பெரும்பாலனோர் அப்படி தான்....
கோகுல் - vellore,இந்தியா
2010-11-29 11:48:25 IST
வேலூர் பொதுகூட்டத்தில் கலைஞர் பேசினார், அதில், ஜெயா வை பற்றி கண்டபடி தூற்றியோ கிண்டல் அடித்தோ அவதூறாகவோ பேசினாரா?. இல்லை,. ஆனால் இதுவே ஜெயா வாக இருந்தால், கலைஞரை பற்றியும், அழகிரி & ஸ்டாலின் பற்றியும், அவர்களது குடும்பம் பற்றியும் கண்டபடி திட்டி இருப்பார், அவருக்கு பொதுகூடங்களில் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா? கலைஞரை திட்டுவது தவிர வேறு ஏதேனும் கொள்கை இருக்கிறதா?. ஜெயா வே கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. கடந்த 2 வருட பல்வேறு மாநில தேர்தல்களில் ஆளும் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் முன்னேற்றத்துக்கே வாக்களிக்கின்றனர், அந்த வகையில் தமிழ்நாடு தொழில், கட்டுமானம், IT , சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் அபார வளர்ச்சி அடைந்துள்ளதை யாரும் மறைக்க முடியாது முடியாது, மறுக்கவும் முடியாது....
ramesh - combatore,இந்தியா
2010-11-29 11:43:44 IST
பீகார் மக்கள் படித்தவர்கள் அதிகம் இல்லை என்றாலும் ஜாதி மத ஊழல் இல்லாத திறமையான அரசை தேர்ந்து எடுத்து உள்ளனர். ஆனால் தமிழ் நாட்டு மக்கள் அதிகம் படித்தவர்கள் இருந்தும் சலுகைக்கா இலவசதிற்காக தம்மை அடிமை படுத்தி கொள்ளுகிறார்கள்...
ம.GANDHI - ARIYALUR,இந்தியா
2010-11-29 11:41:17 IST
இந்த முறை DMK வோட்டர்ஸ் தொகையை உயர்த்துவார்கள் என நாங்கள் எதிர்பார்கிறோம். அண்ணன் ராசா நெறைய சம்பாதிச்சு கொண்டாந்திருக்கார் அல்லவே கழகத்திற்கு...
Prabha - Chennai,இந்தியா
2010-11-29 11:30:01 IST
நண்பர்களே , இப்படி சும்மா உங்க கருத்தை சொன்னால் மட்டும் போதாது. நாமெல்லாம் களத்தில் எறங்கி போராடினால் தான், இந்த மாநில அரசும் மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை விட்டு விட்டு விரைவாக ஊழல் பணத்தை மீட்பர்கள் மற்றும் அவர்களுக்கும் பயம் வரும் தப்பு செய்தால் இளைநர்கள் தட்டி கேப்ட்பர்கள். நான் ரெடி போராட நீங்க ரெடியா?...
Dr. Venkatesh - Nagercoil,இந்தியா
2010-11-29 11:09:06 IST
கருணாநிதி இவ்வாறு சொல்கிறார்: பத்திரிகைகாரங்களுக்கு இதை தெரிவிக்க விரும்புகிறேன். நாங்க இலவசம் கொடுத்தால் தான் நம் தமிழ் நாட்டில் கொஞ்சம் ஓட்டை எதிர்பார்க்கலாம். அதிலும் நாங்கள் எல்லா மக்களையும் திருப்தி படுத்த முடியவில்லை. மேலும், என்ன தான் இலவசம் கொடுத்தாலும், ஓட்டு போட போகும் முன் கையில் பணம் கொடுத்தால் தான் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடுகிறார்கள்.அந்த பணம் என்ன மரத்துலையா விழைந்து வருது? கொள்ளை அடிக்காமல் இந்த இலவசத்தையும், இந்த ஓட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் எப்படி நாங்கள் கொடுக்க முடியும். என்ன தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தாலும், நம் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசம் + லஞ்ச பணம் கொடுக்கவில்லை என்றால், யாரும் ஜெயிக்க முடியாது. அப்படி யாராவது ஜெயித்து காட்டினால்,நான் அண்ணா அறிவாலயம் முன் உயிரை விட தயார். தமிழக மக்களே, தயவுசெய்து ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி நீங்கள் எதுவும் பேசாதீர்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வேறு எங்கும் போகவில்லை. தேர்தலில் போது மக்களுக்கு விநியோகிக்கப்படும். சற்று பொறுமையுடன் காத்திருங்கள்....
saravanakumar - ஜெட்டாஹ்சவுதி,இந்தியா
2010-11-29 11:03:16 IST
அதுதான் குற்றத்தை ஒத்து பதவி ராஜினாமா பண்ணியச்ச. ராஜா தி மு க உறுப்பினர் இல்லன்னு சொல்லும்.. கனிமொழி கு தொடர்பில்லன்னும் சொல்லும் ...... இந்த தி மு க க்கு ஒட்டு போட தமிழன் ஒன்னும் கிறுக்கன் இல்ல.........எப்படியா ராஜா உனக்கு இப்படி மனசு வந்திச்சு....1.75 லச்சம் கோடி ...........உனக்கும் உன் தலிவருகும் போதுமா......
R. Viswanathan - Kolkata,இந்தியா
2010-11-29 10:57:59 IST
Mr. Chandra, USA I very much doubt your address, because neither your English is American, nor the spellings. I have been following some of your comments for quite sometime, but I never chose to counter your arguments as they are your opinions. Only because you sometimes use the words "Jaathi" and "community" I am now compelled to write this. You seem to be supporting the DMK and Mr. Raja only because they belong a community which is different from that of JJ or S.Swamy. Shed this attitude and don't divide people on the basis if caste or religion. Most of the brahmins have stopped talking about caste long back. Only other castes are fighting among themselves. Though I am not a supporter of JJ, I have to remind you about the arrest of Sankaracharya who is the religious leader leader of the caste JJ belongs to. Just because you want to take sides, don't resort to caste and religious divisions. Nothing concrete is going to happen politically by the comments we make in this column, but resorting to comments based on caste and religion will act as a great barrier to the unity of people of our country. I am not writing this to criticize you are to have a continuous verbal dual with you, but with a sincere appeal to you to refrain from using caste and community in your comments. Please give preference to your love, unity and safety of your Nation before your loyalty to the party you prefer....
செந்தில் குரோம்பேட் - சென்னை,இந்தியா
2010-11-29 10:51:27 IST
அய்யா, இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இல்லைனாலும் தி மு க வால் இந்த தேர்தலில் ஜெயிப்பது கடினம் தான். ஏன் என்றால் கடும் மின்வெட்டு, விலைவாசி வுயர்வு, பெட்ரோல் காஸ் விலை வுயர்வு, அரசு விழா விரைய செலவுகள், இதை எல்லாம் பார்த்து மிடில் கிளாஸ் மக்கள் கொதித்து போய் உள்ளார்கள். என்னதான் காசு கொடுத்து (ஒரு வோட்டுக்கு ஆயிரம் ருபாய் பிளான் செய்திருப்பதாக பேச்சு) வோட்டு வாங்கினாலும் ஜெயிக்க முடியாது.(விஜயகாந்த் + ஜெ) வெற்றி வுறுதி)....
2010-11-29 10:50:31 IST
ஒவ்வொரு 5 ஆண்டுகளும் பேருந்து கட்டணம், மின் தட்டுபாடு என்று பிரச்சனைகள் தொடரும். மத்தியிலிருந்து வந்துள்ள spectrum ஊழல் பற்றி தமிழ் நாட்டில் ஒட்டு போடும் யாரையும் பாதிக்காது. மேலும் தற்போது யார் ஊழல் செய்யாதவர்கள். ஜெயலலிதாவை பற்றி தமிழக மக்கள் எல்லாருக்கும் தெரியும் மிக பெரிய மோசடி பேர்வழி என்று. விமான பயணம் ஆடம்பரம் . இப்படியிருக்கும் போது வேறு மாற்று வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. எனவே திமுக மிக பெரிய வெற்றி பெரும்....
suresh - chennai,இந்தியா
2010-11-29 10:47:24 IST
கண்டிப்பாக ஜெயிக்கப்போவது அம்மாதான்....
alphonse - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-29 10:39:27 IST
இந்த முறையும் திமுகவே வெற்றி பெரும். ஊழலை பத்தி பேச ஜெ-க்கு எந்த தகுதியும் இல்லை. மகளுக்கு நன்றாக தெரியும்....
அ.ஜாகிர் உசேன். குத்தலாம் - உம்மல்குவின்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-29 10:37:56 IST
அட போங்கப்பா,டெல்லியில இருந்து தமிழ் நாட்டுக்கு பணம் வந்திருக்கு, இத் பாராட்டாம?! சும்மா தொன தொனத்துக்கிட்டு தமிழ் நாட்டுக்காரன் ஊழல் பண்ணலேன்னா,அந்த இலாகாவில வட நாட்டுக்காரன் மந்திரியா இருந்தா அவன் செஞ்சிருப்பான். அதனால இது நியாயம்ம்ம்ம் ஆனா நியாயம் இல்ல?!...
sunil - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-29 10:29:26 IST
Kalainjar is still better than jayalalitha.....
vit - chennai,இந்தியா
2010-11-29 10:24:53 IST
only your paper is giving tamil nadu people the true picture of the scams.........people have been kept very stupids in tamil nadu....most of the comman men are not at all bothered about the corruption....they donot talk, donot discuss not even bothered about the corruption in tamil nadu....tv media is very partial, many newspapers also behave partial, they are not bringing the true picture of the corruptions and scams...we pay sales tax, service tax, income tax and many other indirect taxes, but these politicians so easily loot and go away..........these people when will they realise the truth???? in the name of free schemes people have been kept fools.........we are paying so many types of taxes for the politicians to loot......people! will not you realise the lootings??? god! please come and save the public...
வம்பன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-29 10:20:59 IST
ஸ்பெக்ட்ரம் மூலம் வருமான இழப்பு என்றுதான் AGS அறிக்கை கூறுகிறதே தவிர ராஜா ஊழல் செய்துவிட்டார் என்று கூறவில்லை. ராஜாவும் எந்த வழக்கையும் சந்திக்க தயார் என்று பகிரங்கமாக கூறிவிட்டார். ஜெயா போல் வாய்தா மேல் வாதா வாங்கி வாய்தா ராஜா என்று பட்டம் வாங்காமல் இருந்தால் சரி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிய நகரங்களை மட்டுமே அடைந்துள்ளது. அதை கிராமங்களுக்கு கொண்டு செல்வது மிகவும் சிரமம். என்னதான் டிவியில் திரும்ப திரும்ப கூறினாலும் மக்களுக்கு அதன் பெயர்தான் நினைவில் இருக்குமே ஒழிய அதனால் தங்களுக்கு நேரடி பாதிப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உடனடியாக பலனளிப்பது போல் திட்டம் அறிவிக்கப்பட்டால் ஸ்பெக்ட்ரம் பருப்பு கிராமங்களில் வேகாது. சென்ற MP தேர்தலில் இலங்கை பிரச்சினைக்கு என்ன கதி உண்டானதோ அதே நிலைதான் ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்கு உண்டாகும். பொதுவாக எல்லா நிலையிலும் திமுக அரசு மீது பெரிய புகார்கள் இல்லை. அரசுஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்புவார்கள். எப்படி பார்த்தாலும் திமுகவுக்கே அதிக வாய்ப்பு....
கிருஷ்ணா - சென்னை,இந்தியா
2010-11-29 10:08:33 IST
மக்களே, தயவு செய்து தி மு க, அ தி மு க, தே மு தி க, என யாருக்கும் வோட்டு போடாதிங்க.. உங்க தொகுதில எவன் நல்லவனோ அவனுக்கு போடுங்க... எல்லாம் பணம் தின்னி பேயுங்க... ஜெயலலிதா எப்போ தாத்தா கிட்ட இருந்து இந்திய லெவெல்ல எப்படி கொள்ளை அடிக்கணும்னு கத்துருட்டு இருப்பாங்க... எப்படியும் அவங்க அடுத்த தடவ வந்த அவங்களும் அப்படி தான் பண்ண போறாங்க......
jopet - singapore,சிங்கப்பூர்
2010-11-29 10:05:07 IST
தமிழக அரசின் சிறப்பான் திட்டங்களாலும் தமிழ் நாட்டின் சீரான முன்னேற்றத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. நடந்து முடிந்த போக்குவரத்து தொழிலாளர் தேர்தல் முடிவு இதற்கு ஒரு சாட்சி. அண்ணா தொழிலாளர் சங்கத்துக்கு தேமுதிக ஆதரவு தருதாம். இப்படி ஒரு செய்தியை வெளியிட்டாங்க. அப்புறம் அம்மா எல்லா கட்சிகளும் அண்ணா தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவு தரணும்ன்னு ஒரு அறிக்கை விட்டாங்க. எல்லாம் ம்ஹூம்.. ஒன்னும் வேகலை. இவங்க எல்லா ஓட்டையும் சேத்தாகூட திமுகவின் தொமுச வாங்கின ஓட்டுக்கு சமமா இல்லை. கூட்டம் கூடுதாம் ஜெயலலிதா கூட்டத்துக்கு. எல்லா ஜாதி சங்கங்களும் இவங்களுக்கு ஆதரவாம். கம்யூனிஸ்ட் போன்ற எதிர்கட்சிகளும் ஆதரவாம். நீங்க ஆணிய புடுங்க வேணாம்ன்னு தொழிலாளர்கள் தொமுசவை தேர்ந்தெடுத்துட்டாங்க. அதே மாதிரிதான் சட்டமன்ற தேர்தல்;இல் திமுகவின் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது பாஸ்!...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-11-29 10:01:40 IST
Mr/Ms Chandra, Instead of wasting your energy in defending your party here, pl place your arguments in the Supreme Court, so that you can do a lot of service to Karuna family...
மரிய அல்போன்ஸ் - சென்னை,இந்தியா
2010-11-29 09:49:22 IST
எந்த விவகாரமும் கலைஞரை அசைத்துவிட முடியாது. அவர்தான் மீண்டும் முதலவர். ஒருவேளை ஊழல் என்று அவரை ஒதுக்கினால் அந்த இடத்துக்கு யாரை போடுவது?சுடுகாட்டு ஊழல் வரை செய்த ஜெயலலிதா வையா?அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளர் தேர்தலில் தோல்விகண்டு நிற்கும் விஜயகாந்தா?எனவே கலைஞரே மீண்டும் முதல்வர்....
சுமித்திரன் - singapore,இந்தியா
2010-11-29 09:28:21 IST
ஆளும் கட்சி க்கு எதிரான அவதூறு பிரச்சாரம். 'அம்மா' -கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீர்??? சாணக்யனுக்கே சவாலா??? ஜெயிச்சுட்டு பேசுறோம்......
தங்கராசு சண்முகவேல் - துபாய்,இந்தியா
2010-11-29 09:11:08 IST
ellam muttalu, kasu vankitu votu poduvanka tamil nadu eny thirunthadu vazhga TN...
வேல் - சென்னை,இந்தியா
2010-11-29 09:00:02 IST
தேர்தல் அறிக்கை ---- மூன்றுவேளை சாப்பாடு , வாரம் இருமுறை ரேஷன் கார்டில் சரக்கு , வாரம் இரண்டுமுறை கறி அல்லது கோழி ... ...வேறென்ன யாரும் படிக்க வேண்டாம் வேலைக்கு போக வேண்டம், வீட்டிலே எல்லாம் சுகமாக கிடைக்கும்.. ஆகவே எல்லோரும் திமுக வுக்கு வோட்டு போடுங்கள்...
Basarie - Kuwait,இந்தியா
2010-11-29 08:59:27 IST
For the larger interest of country of the party and to take moral responsibility, Prime Minister Dr.Manmohan Singh must resign from the prime ministership and to expel DMK from UPA Government so that people may convince and can support UPA Govt. Whenever any allegation raises Congress party used to take immediate step to replace from the respected posts and appoint a new chief ministers for Maharastra and A.P. When spectrum scandal was revealed whether UPA ChairPerson take a action against PM or its alliance partner. The looted former minister is hero of DMK party and M.Karunanishi has been supporting more than his younger son Stalin...
ஸ்ரீனிவாசன் - தஞ்சாவூர்,இந்தியா
2010-11-29 08:56:39 IST
2011 assambley election D M K win 100 % there is நோ டவுட் ....
அருண் - chennai,இந்தியா
2010-11-29 08:56:30 IST
மக்கள் விழித்து கொள்ளாவிட்டால், தமிழகம் விற்கப்படும் !!! அனைவரும் அடிமைகள் ஆவோம் !!!...
முக்தார் காலித் - துபாய்,இந்தியா
2010-11-29 08:46:30 IST
ஏன் அய்யா பட்டாசு பாலு உங்க வீட்டுல உள்ள கலர் டிவி இலவசமா கிடைச்சது தானே அதை மறந்துட்டு கேன பசங்கள பத்தி பேசுகிறீரே, இது நியாயமா. ஹோம் தியேட்டர் லேப்டாப் செல் போன் சும்மா கொடுத்தால் வாங்காம போயறிவீரோ!!!!!!...
Raj - usa,இந்தியா
2010-11-29 08:30:06 IST
Many times we are biased and that is why we think that others are biased too. Chandra, if you are a Jaathi veri piditha alu, that does not mean that everyone has to follow you. Raja was a minister for close to 10 years. A corrupted person does not have a religion, caste or whatever. Do not support a corrupted person by asking if JJ is perfect or someone else is perfect. All the corrupts including your Aunty JJ should be punished. All are getting away with the corruptions...and people are frustrated....
தனபால் - மலேசியா,இந்தியா
2010-11-29 08:26:26 IST
அய்யா கம்யூனிஸ்ட் பெரியவரே, நேற்று இலங்கையில் தமிழனை கொன்று குவித்தபோது நீங்கள் ஏன் பாராளுமன்றத்தை முடக்கம் செய்யவில்லை, அப்போது தெரியவில்லையா தமிழன் என்று.இன்று நடந்தால் ஊழல் மன்னிக்க முடியாதவைதான்,அதனை வீடு வீடாக சென்று தெளிவு படுத்துங்கள் மக்களிடம்,அதை விட்டு விட்டு மக்களின் வரி பணம் எத்தனை ஆயிரம் கோடி வீணாகி கொண்டு இருக்கிறது,அப்போ உங்களுக்கும் ஊழல் செய்தவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்.ராசா தெரியாமல் செய்த தவறை நீங்கள் எல்லோருக்கும் தெரிமாறு செய்கிறீர்கள்,இதனுடைய விளைவு வரும் தேர்தலில் உங்களுக்கு நல்ல படமாக அமையும் என்பது தெளிவாக தெரிகிறது உங்களின் நடவடிக்கையே காட்டுகிறது...........
தமிழ்செல்வன் - Chennai,இந்தியா
2010-11-29 08:16:41 IST
சந்திரா சொல்வது முற்றிலும் தவறு !! ச்பெக்ட்ரம் ஊழல் ஒரு மெகா ஊழல்!! மக்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை!! அடுத்த சில வாரங்களில் மேலும் விவரங்கள் கிடைக்கும் ! உச்ச நீதிமன்றம்,சிபிஐ கிடுக்கி பிடி தொடரும் ! ராஜா மட்டும் தவறு செயவில்லை ! இதன் பின் ஒரு பெரிய கொள்ளை கூட்டமே உள்ளது !!உண்மை விரைவில் வெளி வரும் ! ஏற்கனவே பிரதமர்,சோனியா மஞ்சள் துண்டு கட்சிக்கு கொள்ளையடிக்கும் துறைகள் எதுவும் கொடுபதில்லை என முடிவு அடுத்து விட்டனர் ! காங்கிரெஸ் இந்த கூட்டத்தை விரைவில் தூக்கி எறியும் ! இந்த கூட்டம் கொள்ளை அடித்தது போதும் ! அவர்கள் இருக்கவேண்டிய இடம் உள்ளே !...
திராவிடன் - தஞ்சை,இந்தியா
2010-11-29 08:12:28 IST
இலங்கை பிரச்சினை அன்னிய தேசத்து பிரச்சினையாக பாமரனுக்கு பட்டிருக்கலாம். ஸ்பெக்டரம் நம் தேசத்தின் இழப்பாக மக்கள் மனதில் பதிந்திருக்கலாம்.ஆனால் ஏழை ஒவ்வொருவனின் கல்வியும் மறைமுகமாக மறுக்கப்பட்டு திராவிட ஏழையின் குடும்பத்திற்கு ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை லட்சகணக்கான குடும்பங்களுக்கு மறுக்கப்பட்டு மனிதம் புதைந்து போனதன் சாட்டை அடி திருப்பிக்கொடுக்க என் திராவிடன் தருணம்(தேர்தல்) நோக்கி தவம் இருக்கிறான்....
gunasekar - trichy,இந்தியா
2010-11-29 07:59:03 IST
தற்போது ஏறத்தாழ தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த ஒரு தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றியை press மூடி மறைக்கிறது. இதில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் இந்த பத்திரிகைகள் இந்த தேர்தலதான் தமிழ்நாட்டின் opinion poll என்று எழுதி ஒரு boostup தருவார்கள். தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமல்ல பொது மக்கள் மத்தியிலும் திமுகவின் செல்வாக்கு குறைந்ததாக தெரியவில்லை...
gunasekar - trichy,இந்தியா
2010-11-29 07:48:49 IST
முன்பு போல் இல்லாமல் தற்போது நாட்டில் மீடியா எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பொய்யை உண்மையாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பாராளுமன்ற தேர்தல் ஒரு உதாரணம் 1 75 கோடி இழப்பு என்பதை மக்கள் மத்தியில் 1 75 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டார்கள் கருணாநிதியும் ராஜாவும் என்று தவறாக செய்கிற பிரச்சாரம் எதிர் விளைவை ஏற்படுத்துமே தவிர அது தி மு க வை வீழ்த்த பயன்படாது. பாராளுமன்ற நிகழ்வுகள் சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது ஓவர் கேம் ஆடுகிறார்கள்...
myjinju - Singapore,சிங்கப்பூர்
2010-11-29 07:45:14 IST
கவலையே படாதீங்க. அடுத்த தேர்தல் வாக்குறுதி அனைவருக்கும் ஆண்களாய் இருந்தால் வாரம் இரண்டு பாட்டில் சாராயம் மற்றும் இளைஞர்களுக்கு மாதுக்கள் மாதம் இரு முறை. பெண்களுக்கு சமைக்க வேண்டாம். இன்ஸ்டன்ட் இட்லி, தோசை ரேஷன் கடையில் இருந்து ப்ரீ. மக்களே என்ஜாய். போங்கடா முட்டா thamizhangala . உழைக்கணும் நல்ல சாப்பாடு சாப்பிடனும். பிச்சை எடுப்பது கேவலம். அது எவன் குடுத்தாலும் கேவலம். எப்ப திருந்துவிங்க?...
வீரகணபதி - Chennai,இந்தியா
2010-11-29 07:42:20 IST
சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க. இதுவரை ஊழல் செய்து தோல்வி அடைந்த ஒரே பெண்மணி செல்வி ஜெயலலிதா மட்டும்தான். அதுவும் அவரது ஆணவ நடவடிக்கையால்தான் தோல்வி கண்டார். இவரைத் தவிர ஊழல் செய்த எந்த அரசியல்வாதியும் இதுவரை தோல்வி கண்டது இல்லை. அதுவும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. முந்தைய பாஜக அரசு கடைப்பிடித்த கொள்கை வழிகாட்டுதலைதான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கடைப்பிடித்திருக்கிறது. தனிப்பட்ட ராசாவையோ திமுகவையோ இதில் குறை கூற ஏதுமில்லை. சிறப்பான வகையில் நல்ல திட்டங்களை துவக்கி மக்கள் பயனடையும் விதமாக திமுக ஆட்சி செயல்படுவதால் மாநிலத்தில் கண்டிப்பாக திமுகவே வெற்றி பெறும். சந்தேகமே வேண்டாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்மையில் நடந்து முடிந்த போக்குவரத்து ஊழியர்கள் தேர்தலில் திமுகவின் அமோக வெற்றியாகும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! கலைஞர் ஆறாவது முறையாக முதல்வர் பதவியேற்று சாதனை புரிவா்....
விவேகாநந்தன் - பரமத்திவேலூர்,இந்தியா
2010-11-29 07:26:51 IST
திராவிடர் முன்னேற்ற கழகத்துக்கு இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா ? அடிச்ச ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடியில ஒரு இரண்டாயிரத்து ஐநூறு கோடிய தேர்தல் நேரத்துல செலவு பண்ணினா போதுங்க தி .மு .க. ஜெயித்துவிடும் . நம்ம மக்களும் பல்ல காட்டிகிட்டு ரூபாய வாங்கிகிட்டு வோட்டு போட்டுருவாங்க . அவங்க மக்கள் நலத்திட்டங்கள் தான் எங்களை ஜெயிக்க வைத்தது என்று சொல்லிக்கொண்டு ஆட்சியில் உக்காருவாங்க . பாருங்களேன்...
சிம்பு - ஈரோடு,இந்தியா
2010-11-29 07:08:02 IST
இருக்கவே இருக்கு வோட்டிங் மெஷின்(மாத்திப்போட). அப்புறம் என்ன அடுத்ததும் நீங்கதான்...
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-11-29 06:55:22 IST
1967 ஆண்டு தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் அப்போதைய காங்கிரஸ் படு தோல்வியை தழுவியது எதற்கு. அது செய்யாதது என்ன? மணலியில் என்னை சுத்தகரிப்பு ஆலையை ஏற்படுத்த வில்லையா? கிண்டியில் தொழில் பூங்காவையை ஏற்படுத்த வில்லையா? டெலிப்ரின்ட்டர் நிறுவனத்தை உருவாக்கவில்லையா? நந்தம்பாக்க்கத்தில் சர்ஜிகல் நிறுவனத்தை உருவாக்க வில்லையா? ஆனால் அவர்கள் செய்த பெரிய ஊழல் என்ன? ரேஷன் அரிசியை கேரளாவுக்கு அனுப்பியதும், அப்போதைய முதல்வர் வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அரிசியை கொண்டு வந்து கையும் கலவோடும் பிடித்ததுதானே. அப்போதைய தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேசி வாக்கு சேகரித்தது. ( பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி? கக்கன்ஜி அண்ணாச்சி கடுகு விலை என்னாச்சி? காமராஜர் அண்ணாச்சி கருவாடு விலை என்னாச்சி? காகித பூ மணக்காது? காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது. ) இவை தானே அன்றைய தி.மு.க.வின் தேர்தல் கொள்கை பிரச்சாரமாக இருந்தது....
manivannan - chennai,இந்தியா
2010-11-29 06:49:59 IST
இதுல எந்த அரசியலும் நல்ல இல்லை எல்லாம் ஒரே குட்டைல உறின mattaithan. கடவுள நாம சாதாரணமா பார்க்க முடியாதோ அது போலத்தான் ஊழல் இல்லாத அரசியல்வாதிய பார்க்க முடியாது...
chandan - singapore,சிங்கப்பூர்
2010-11-29 06:47:38 IST
இந்த முறை நிச்சயம் திருவோடு இலவசம், தமிழ் நாட்டு மக்கள் கண்டிபாக பிச்சை காரர்கள் ஆவது உறுதி...
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2010-11-29 06:27:19 IST
எழுத படிக்காத பாமரனும,,,இப்போ கோடி கோடியாய் என்னமோ ஊழல் என்கிறார்களே,,,,, அப்படினா என்ன,,,யார் செஞ்சா,,நம்ம தலைவரா,,, நம்பவே முடியிலே,, என்று விசாரிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டான்,,, மூலை முடுக்கெல்லாம் இதேஉலக மகா ஊழல் பற்றி தான் பேச்சு,,,என்னதான் இலவசத்தை கொடுத்து வாயை அடைத்தாலும்,,, மறுபடியும் ,,மறுபடியும்,,, இந்த ஊழல் விவகாரத்தை எழுப்ப மாட்டார்கள் ,,தெரிந்து கொள்ள ஆசை பட மாட்டார்கள் எனபது நிச்சியமில்லை,,, இதற்கு கருணாநிதியே மூல காரணம்,,, முதலிலேயே ராஜாவை ராஜினாமா செய்ய சொல்லி ,,இந்த விஷயம் பரவாமல்,, அப்படியே அடக்கியும் இருக்கலாம்,,, ஆனால் என்ன செய்வது,,,,,, தவளையும் தன் வாயால் கெடும் எனபது மாதிரி,,,,, தன் அளவுக்கு மிஞ்சிய அறிவால் தலை கணத்தால் தன்னை தவிர எல்லோரும் முட்டாள்,, ,,,தனக்கு மட்டுமே இந்த அரசியல் தந்திரம் தெரியும் ,,,என்று தற்பெருமை உடல் பூராவும் நிறைந்து,,,, வசமாக தனக்கு தானே வெட்டி கொண்ட அழிவு குழி தான் இது,,, பூனை கண்ணை மூடிக்கொண்டு தான் பால் குடிக்குமாம்,, ஏன் என்றால் எல்லாரும்,,,, தான்,,,,, பால் திருட்டுத்தனமாக குடிப்பதை பார்க்கவில்லை, என,,,, அதே போல் தான் இந்த ஊழல் சக்கரவர்த்தியும்,,, தான் என்னதான் ஊழல் செய்தாலும் மக்கள் இதுவரை,, கண்டுக்கவே இல்லை,,இனியும் கண்டுக்கவே மாட்டார்கள்,,, என்ற மனப்பால் தான் இவ்வளவு நாளும்,,, மக்கள் விளித்து கொண்டது,,, பாவம் இவருக்கு தெரிய வாய்ப்பில்லை,,, மக்களும் இதை பற்றி இனி அக்கு வேறு ஆணி வேறாய் புரியும் வரை ஓயமாட்டார்கள்,,,,...
குரு - சென்னை,இந்தியா
2010-11-29 05:51:39 IST
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் கொள்ளை அடித்தார்கள். இப்போ நாடு முழுவதும் கொள்ளை அடிக்கிரர்கள். எனவே தமிழர்களே உங்களுக்கு ஆர்யர்கள் பணம் பட்டு வாடா செய்யப்படும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக