வியாழன், 25 நவம்பர், 2010

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி!

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீது இலங்கை மின்சார சபையின் வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த சோபா நோபல் என்னும் 32 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலத்தை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக