கொழும்புத் துறைமுகத்திலிருந்து பொருட்களை திருட்டுத் தனமாகக் கடத்திய ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது. |
துறைமுகத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களை திருட்டுத்தனமாக கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் திருட்டுத்தனமாக இறக்கும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு பொலிசார் விசேட சோதனையொன்றை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தனர். திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கும்பலில் 21 பேரை நேற்றிரவு பொலிசார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியிருந்தனர். ஆயினும் அவர்களில் 07 பேர் மாத்திரமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக