புதன், 3 நவம்பர், 2010

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டோர் இப்போது ஆட்கடத்தலில் ஈடுபாடு


- இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் பற்றி கனேடிய அமைச்சர் கென்னி
இலங்கை மோதல்களின் போது ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்ட வர்கள் தற்பொழுது அவர்களது வர்த்தகத்தை மாற்றி ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகக் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

கனடாவுக்குள் ஒருவரை அழைத்து வருவதற்கு ஆட்கத்தல் காரர்கள் 50,000 டொலர்களை அறவிடுகின்றனர். இது கனடாவின் குடிவரவு முறைமைக்குப் பெரும் சவாலாக உள்ளது. கனேடிய ஊடகமான “தகு ளோபல் மெயில்”க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே கனேடிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்து ள்ளார். மேலும், கருத்துத் தெரிவித்த அவர், கனடாவுக்குள் வருபவர்கள் பல்வேறு காரணங்களுடன் வருகின்றனர்.

சிலர் பொருளாதார குடியேற்றவாசிகள், சிலர் நியாயமான புகலிடக் கோரிக் கையாளர்கள் எனினும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுக்க குடிவரவுச் சட்டம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும்.

இலங்கையிலிருந்து வெளியேறி கனடாவில் புகலிடம் கோரியவர்களில் அனேகமானோர் ஏதாவது ஒரு காரணத்துக்காகவாவது தமது நாட்டுக்குச் சென்று திரும்புகின்றனர். அச்சமான நாடு எனக் குற்றஞ்சாட் டியவர்கள் நாட்டுக்குச் செல்கின்றனர்.

அண்மையில் கப்பல் மூலம் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் கனடாவுக்குள் நுழைந்த பின்னர் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா மக்கள் வழங்கிய ஆதரவும் கணிசமானளவு குறைந்துள்ளது.

சட்டவிரோதமான குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு அமைப்புடனும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரால யத்துடனும் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அத்துடன் இடைத்தங்கல் நாடுகளில் எல்லைப் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டும்.

அதேநேரம் அகதிகள் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட் டுள்ளனரென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டுடன் கனடா இணங்க வில்லையென்றும் கூறினார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக