இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் என மற்றுமொரு கதையினை ஔிபரப்பி நாட்டின் பாதுகாப்பு படையினரது நற்பெயருக்கு கலங்கமேற்படுத்தவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை வீணடிக்க முயற்சிப்பதாகவும் அல் ஜஸீரா செய்திச் சேவை மீது இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
எதுவிதமான நம்பத்தகு ஆதாரங்களுமின்றி கிடைக்கப்பெற்ற ஒருசில புகைப்படங்களை கொண்டு சித்தரிக்கப்பட்ட ஒரு செய்தியினை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சித்தரிக்கப்பட்டு செய்திகளுக்கு கடுமையான கண்டனத்தையும், மறுப்பினையும் தெரிவிப்பதோடு, ஒருசில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான முனைப்புகளை முன்னெடுத்து இலங்கையின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயல்வாதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக