வெள்ளி, 12 நவம்பர், 2010

ஜனாபதிபதியின் 2 ஆவது பதவியேற்பு நிகழ்வில் சீனாவின் விசேட தூதுவர்

ஜனபதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்கால பதவியேற்பு நிகழ்வில் சீன ஜனாதிபதியின் தூதுவர் சங் குவாவே கலந்து கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஹொங்லி தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை சங் குவாவே தெற்காசிய நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் மேலும் சீன துறைமுக பொறியியலாளர் நிறுவனத்தால் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத்தின் அங்குரார்பண நிகழ்விலும் சங் குவாவே கலந்து கொள்ளவுள்ளதாகவும் சீன இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக