புதன், 3 நவம்பர், 2010

கொழும்பு ஆனந்தா கல்லூரி வகுப்பறையில் இருந்து துப்பாக்கி மீட்பு

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் வகுப்பறை ஒன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் மைத்திரி சிறிபாலசேனவின் பாதுகாப்புப் பிரிவினர் கடந்த 30 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது இத்துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இப்பாடசாலைக்கு அன்றைய தினம் விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருந்த நிலையிலேயே அவரின் பாதுகாப்புப் பிரிவினர் இங்கு தேடுதல் மேற்கொண்டு இருந்தனர்.
அப்போதே இத்துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றது. அமைச்சர் அன்றைய தினம் பாடசாலைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற பரிசளிப்பு வைபவம் ஒன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக