திங்கள், 1 நவம்பர், 2010

இந்திய தயாரிப்பு (Bags)'பேக்'குகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி

இந்தியாவில் தயாரிக்கப்படும் பேக் வகைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறதாம்.

குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் மத்தியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைப்பைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளதாம். இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப் பைகள் ஸ்டைலாகவும், கம்பீரமாகவும், அழகைத் தூக்கிக் காட்ட உதவுவதாகவும் ஹாலிவுட் பிரபலங்கள் புளகாங்கிதப்படுகின்றனராம்.

இதையடுத்து இந்திய தொழிலாளர்களைப் பயன்படுத்தி இந்திய ஸ்டைலில் பேக்குகள் தயாரிப்பதில் உலகப் புகழ் பெற்ற ஹெர்ம்ஸ், சேனல் ஆகிய பேக் தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

ஜூலியா ராபர்ட்ஸ், சியன்னா மில்லர் ஆகியோர் மேட் இன் இந்தியா என்று பொறிக்கப்பட்ட பேக்குகளையும், 'டம்பப்' பைகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனராம்.

இந்தியாவின் படைப்புகளை உலக அரங்கில் முதல் முறையாக பரப்பிய பெருமைக்குரியவரான டிசைனர் மீரா மகாதேவியா இதுகுறித்துக் கூறுகையில், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவின் கைவினை டிசைன்கள் மிகவும் பிடித்துப் போயுள்ளன. இதனால்தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைப்பை உள்ளிட்டவற்றுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது என்றார்.
பதிவு செய்தவர்: பழனி
பதிவு செய்தது: 01 Nov 2010 5:30 pm
இந்திய பேக்குகள் வெளின்aட்டில் தான் அதிகம் உள்ளனர்.

பதிவு செய்தவர்: ராகுல் காந்தி
பதிவு செய்தது: 01 Nov 2010 4:33 pm
நான் கூட என்னைத்தான் சொல்றாங்களோன்னு நினைச்சேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக