செவ்வாய், 2 நவம்பர், 2010

59வது இடத்தில் இலங்கை: இந்தியா 88வது இடத்தில்,செழுமை மிகுந்த நாடுகளின் 2010ம் வருட

உலகின் செழுமை மிகு நாடுகளில் 59வது இடத்தில் இலங்கை: இந்தியா 88வது இடத்தில்
உலகில் செழுமை மிகுந்த நாடுகளின் 2010ம் வருட பட்டியலில் பெயரிடப் பட்டுள்ள 110 நாடுகளில் இலங்கை 59வது இடத்தில் உள்ளது. 2009ம் வருட பட்டியலில் இலங்கை 68 ஆவது இடத்தில் இருந்தது. இவ்வருட பட்டிய லில் 9இடங்கள் முன்னேறி யுள்ளது. தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவை பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. சீனா பட்டியலில் 58வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியா 88 வது இடத்திலும் நேபாளம் 91வது இடத்திலும் பங்களாதேஷ் 96வது இடத்திலும் பாகிஸ்தான் 109 வது இடத்திலும் உள்ளன. உலகில் 90 சதவீத சனத்தொகையை கொண்ட 110 நாடுகள் இந்த பட்டியலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக