திங்கள், 22 நவம்பர், 2010

50 அமெரிக்க வீரர்களை ஒரு நாய் காப்பாற்றியது

அஃப்கனிஸ்தானில் ஐம்பது அமெரிக்க வீரர்களை
ஒரு நாய் காப்பாற்றியது.
பின்னர் ‘குறி’ என்று பெயரிடப்பட்ட
அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் கலப்பினம்,
ஒரு தெருநாய்,
அப்போது ராணுவக்கூடத்தருகில்
தற்கொலைக் குண்டுதாரியைக் கண்டு
குரைத்தது.
குறி பின்னர் அமெரிக்காவுக்குக் கொணரப்பட்டாள்.
ஓப்ராவின் ‘அபாரமான மிருகங்கள்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றாள்.
அரிஸோனாவில் ஒரு குடும்பம்
பின்னர்
குறியைத் தத்தெடுத்துக் கொண்டது.
வீட்டுத் தோட்டத்திலிருந்து
கடந்த வாரம் குறி தப்பியோடினாள்,
மிருகக் காப்பகத்துக்குப் போய்ச்சேர்ந்தாள்.
அங்கே, தவறுதலாய் அவளை
கருணைக்கொலை செய்துவிட்டார்கள்.
காப்பகத்தின் சேர்க்கை வழிமுறைகள் பின்பற்றப்படவில்லையென
பணிநீக்கம் செய்திருக்கிறார்கள் ஒரு
ஊழியரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக