உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் இன்றைய தினம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1997ம் ஆண்டில் வடகொரியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கணக்காய்வாளர் பொன்னய்யா ஆனந்தராஜ், வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தராஜ் தாய்லாந்தை மையமாகக் கொண்டு புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு வலுவாக இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக