வெள்ளி, 8 அக்டோபர், 2010

Nissan Micra.சென்னை 3886 மைக்ரா கார்கள் ஐரோப்பாவுக்குஏற்றுமத

 நிஸ்ஸான்் நிறுவனத்தின் வெற்றிகரமான அறிமுகமான மைக்ரா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. அதன் சென்னை உற்பத்திப் பிரிவிலிருந்து இதுவரை 3886 மைக்ரா கார்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதவிர மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கும் மைக்ரா ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் அத்தனை கார்களும் சென்னையில் உள்ள நிஸ்ஸானின் உற்பத்திப் பிரிவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் தனது பார்சிலோனா உற்பத்திப் பிரிவின் 6 பிரிவுகளை சென்னைக்கு மாற்றியது நிஸ்ஸான் என்பது நினைவிருக்கலாம். ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ. 4500 கோடி முதலீட்டில் சென்னைப் பிரிவை நிஸ்ஸான் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏற்றுமதியின் மூலம் சென்னையிலிருந்து கார்களை ஏற்றுமதி செய்யும் பெருமை மிக சர்வதேச நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிஸ்ஸானும் இணைந்துள்ளது. மேலும் நிஸ்ஸானின் முக்கிய சர்வதேச கார் தயாரிப்பு மையமாக சென்னை மாறியுள்ளது.

இந்த நிதியாண்டில் 1.10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ய நிஸ்ஸான் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்துடன் நிஸ்ஸான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன்படி, எண்ணூர் துறைமுகத்தில் 1.40 லட்சம் சதுர அடி இடம் நிஸ்ஸான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மைக்ரா மூலம் நிஸ்ஸானுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இந்தியாவில் விற்பனையான 1256 கார்களில் மைக்ரா மட்டும் 1183 விற்றுள்ளதாம். கடந்த ஆண்டு இதே மாதத்தில் மைக்ராவின் விற்பனை வெறும் 57 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தில் விற்பனையான பிற நிஸ்ஸான் தயாரிப்புகள் விவரம் - டியனா 18, நிஸ்ஸான்எக்ஸ் டிரையல் 55 ஆகும்.

இதுவரை 3600 மைக்ரா கார்களுக்கு புக்கிங் கிடைத்துள்ளதாம். மைக்ராவைப் புக் செய்தால் 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதை மேலும் குறைக்க நிஸ்ஸான் முயற்சித்து வருகிறதாம். ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியையும் அதிகரிக்க அது திட்டமிட்டுள்ளதாம். இதுவரை மொத்தம் 3293 மைக்ரா கார்களை விற்றுள்ளது நிஸ்ஸான் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக