வெள்ளி, 8 அக்டோபர், 2010

49 நாட்களின் பின காணாமற் போன மட்டு மீனவர்கள மீட்பு.

மட்டக்களப்பு, வாழைச்சேனைக் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு சென்றிருந்த நிலையில் காணாமற் போயிருந்த மூன்று மீனவர்கள் 49 தினங்களுக்குப் பின்னர் நேற்றுமாலை வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி மீன்பிடிக்கச் சென்றநிலையில் காணாமற் போயிருந்தனர். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இவர்களின் படகு செயலிழந்ததால் காற்றில் அடிபட்டுச் சென்றநிலையில் வளைகுடா கடலில் வைத்து திருமலை மாவட்ட டோராப் படகு மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமலை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட இவர்கள் பொலீஸ் விசாரணையின்பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை, பேத்தாளையைச் சேர்ந்த 52வயதான கணபதி சிவராசா, அவரது மகனான 20வயதுடைய சிவராசா ஜீவராசா மற்றும் 38வயதான செல்லையா மனோகரன் ஆகியோரே வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக