திங்கள், 1 நவம்பர், 2010

Nallur ஹோட்டல் போலன்றி யாத்திரிகர் மடம் போன்ற

 நல்லூரில் ஐந்து நட்சத்திர உல்லாச ஹோட்டல் போலன்றி யாத்திரிகர் மடம் போன்ற கட்டடம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இணங்கியுள்ளனர் என்று இந்து அமைப்புகளின் ஒன்றியச் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்தார்.
நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்திற்கும் ஹோட்டல் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிர்வாகத்தினருக்கும் இடையில் நல்லை ஆதீனத்தில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தக் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பரமநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நல்லூரில் ஆடம்பர ஹோட்டல் அமைப்பதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
அமைதியான இடமாகவும் புனித பிரதேச மாகவும் விளங்கும் பகுதியில் இவ்வாறான ஹோட்டல் அமைப்பது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும். மேலும் சுற்றுப்புறச் சூழல் மாசடையும்.
எனவே இவற்றை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்தின் ஏனைய பிரதேசங்களில் உள்ள விசாலமான திறந்த இடங்களில் குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலை அமைக்க முடியும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.
இந்த ஹோட்டல் அமைப்பதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் பெரும் அபிவிருத்தி ஏற்படும் என்றும் இருநூறுக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ஹோட்டலை அமைக்கவிருக்கும் குழுவினரால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
எனினும் எமது நியாயங்களை ஏற்றுக்கொண்ட அவர்கள் தமது திட்டத்தை மாற்றி அந்தப் பிரதேசத்தில் சைவ உணவுகளுடன் கூடிய மது குடிபானங்கள் ஏதுமற்ற யாத்திரிகர் மடம் அமைக்கப்படும் என்றும் காலப் போக்கில் இந்த யாத்திரிகள் விடுதி அப்பிரதேச மக்களாலேயே நிர்வாகிக்கப்படும் வகையில் செய்யப்படும் என்றும் தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழல் மாசடையாதவாறு 400 மில்லியன் செலவில் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு பாவிக்கப்படும் என்றும் எம்மிடம் தெரிவித்தனர்.
எனினும் இவ்வாறு மேற்கொள்ளமுடியாத சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பரமநாதன் மேலும் தெரிவித்தார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக