திங்கள், 25 அக்டோபர், 2010

Kashmir 104 ராணுவ வீரர்களுக்கு தண்டனை

காஷ்மீரில் மனித உரிமை மீறல்:
104 ராணுவ வீரர்களுக்கு தண்டனை
ராணுவ தளபதி வி.கே. சிங்,  ‘’ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ராணுவத்தினர் மீது கடந்த 1994-ம் ஆண்டு முதல் 988 புகார்கள் வந்தன. அவற்றில் 965 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

அவற்றில் 940 புகார்கள் பொய்யானவை என தெரியவந்தது. மீதமுள்ள 25 புகார்கள் உண்மையானவை என கண்டுபிடிக்கப்பட்டது’’என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ‘’ அந்த புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 104 ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 39 பேர் அதிகாரிகள், 9 பேர் ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 56 பேர் வீரர்கள்.
இவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பலர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

3 மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு 48 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. 6 மாத விசாரணைக்கு பின் 20 பேரும், ஒரு வருட விசாரணைக்கு பிறகு 29 பேரும் தண்டிக்கப்பட்டனர். 2 பேருக்கு மட்டுமே 2 வருட விசாரணைக்கு பின் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரின் மீதும் ராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கில் என்கவுண்டரில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் 2 ராணுவ அதிகாரிகள் எந்தவித விசாரணையுமின்றி, “சஸ்பெண்டு” செய்யப்பட்டனர். மேலும், மனித உரிமை மீறலில் ராணுவ வீரர்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது”என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக