ஞாயிறு, 31 அக்டோபர், 2010

Jaffna இயங்கிவந்த போலி கல்வி நிறுவனத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த போலி கல்வி நிறுவனத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் பட்டப்படிப்பினையும் தொழில் வாய்ப்பினையும் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து மாணவர்களிடம் பெரும் தொகை பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்து கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த போதிலும், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் பிரித்தானியாவில் எந்தவொரு கல்வி நிறுவனமும் இயங்கவில்லை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான அளவில் இந்தக் கல்வி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. உள்ளுர் ஊடகங்களில் பாரியளவு விளம்பரங்கள் செய்யப்பட்டதடன், சில பத்திரிகைகள் குறித்த கல்வி நிறுவனத்தின் சேவையை புகழ்ந்து கட்டுரைகளை வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கேம்ரீட்ஸ் ஏசோசியசன் ஒப் மெனேஜர்ஸ் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு குறித்த கல்வி நிறுவனம் சான்றிதழ்களை விநியோகம் செய்துள்ளது. குறித்த கல்வி நிறுவனத்தி பயின்ற மாணவர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிமான தொகையை செலுத்தி மேற்குலக நாடுகளுளில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இவ்வாறு பிரித்தானியா வீசா கோரி விண்ணப்பித்த மாணவர்களின் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாத வகையில் உத்தவினை பிறப்பிக்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக