ஞாயிறு, 31 அக்டோபர், 2010

Dubai கொள்ளைச் சம்பவத்தில் இரண்டு இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை

டுபாயில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குறித்த இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 265,000 திர்ஹாம் மற்றும் 20000 யூரோ பணத்தை குறித்த இரண்டு இலங்கையர்களும் திருடிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பணியாற்றிய நிறுவனத்தின் காப்புப் பெட்டகத்திலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு இலங்கையர்களுக்கும் தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகாமையாளர்களின் காப்புப் பெட்டகத்தின் சாவிகளுக்கு நிகரான போலியான சாவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு மூன்றுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக