செவ்வாய், 19 அக்டோபர், 2010

Eric solheirm,எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கை வருகை!

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கை வருகை!

நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களை சொல்ஹெய்ம் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது முந்தைய இலங்கை விஜயங்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளிற்கும் இடையிலான சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் விசேட தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மிற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் எதிரான இலங்கையில் கடும் எதிர்ப்புகள் வெளிப்பிட்டிருந்தன.
எனினும் கடந்த மாதம் ஜ.நா.கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க்கிற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எரிக் சொல்ஹெய்மை சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் சொல்ஹெய்ம் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக