அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளார். குறுந்துவத்தை பொலிஸாரினால் இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டே பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதுலை கைது செய்ய அனுமதி, 21 மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிறை
அண்மையில் உயர்கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததானக் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் காணப்படுமாயின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன உள்ளிட்ட சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதென கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி குறுந்துவத்தை பொலிஸாருக்கு அறிவித்தார்
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உயர் கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன உள்ளிட்ட 4 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதற்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் குறுந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
அதனால் அவர்களை கைது செய்வதற்கென விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாட்சியங்கள் காணப்பட்டால் சந்தேகநபர்களை கைது செய்ய பிடிவிராந்து விடுக்கப்படத் தேவையில்லை என கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர் கல்வி அமைச்சில் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த 21 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி பொலிஸார் முன்வைத்தக் கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி பிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக