திங்கள், 18 அக்டோபர், 2010

சமூக முன்னேற்றத்திற்காக போராடுமாறு அழைப்பு விடுக்கின்றது மக்கள் ஜனநாயக முன்னணி

People Democratic Front

A political movement for the establishment of People’s Democracy.

614, Bloemendhal Road, Colombo 15, Sri Lanka.
Telephone: +94115765456. Mobile: +94778489855.
E’mail: abbomr@bellmail.lk.


மு.க.அபூயூசூப்
பொதுச் செயலாளர்

பத்திரிக்கைச் கெய்தி

இலங்கைப் பாராளுமன்றத்திலே, மக்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கும், சமாதானத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் ஊறு விளைவிற்கும் 18வது அரசியல்சாசன சட்டத் திருத்;த மூலம் நிறை வேற்றப்பட்டதை எமது மத்திய குழு ஐயந்திரிபின்றிய வார்த்தைகளால் ஏகமனதாகம் வன்மையாகவும் கண்டிக்கின்றது.

மூலம்
அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரங்களையுடைய ஜனாதிபதிக்குக் கொடுத்து மக்களின் இறைமையின் மற்ற அம்சங்களான பாராளுமன்றத்தையும், நீதி மன்றங்களையும் அதற்கு கீழ் படியவைக்கின்றது.

இந்த சட்ட மூலத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்தவர்களும், எதிர்க்கின்றோம் ஆனால் வேறு காரணங்களுக்காகவே ஆதரிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு ஆதரவளித்தவர்களும் அரச சலுகைகளையும் அதிகாரங்ஙளையும் பெற்றுக் கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் தங்களுக்குரிய ஆசைகளை மறைத்துக் கொண்டு குரூரமானதும், குறுகியதுமான, இன மத காரணங்களைக் கூறிக் கொண்டு ஆதரவளித்தவர்களும், அவர்களுக்கு வாக்களித்த, அவர்களைத் தெரிவு செய்த இந்த நாட்டின். அப்பாவிகளாகவும், சலுகைகள் குறைந்தவர்களாகவும், வசதியற்றோர்களாகவும் இருக்கின்ற பெரும்பாண்மையான மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர்கள் குற்றம் நிறைந்த துரோகம் இழைத்துவிட்டனர்

தேசம், உடனடியாகவும், உறுதியாகவும் ஜனநாயத்தை ஆழமாகவும், பரவலாகவும்
விரிவடைய செய்யயும்போது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களின் யாராலும் பறித்தெடுக்கப்பட முடியாததும், அவர்கள் தாமாகவே விட்டுக் கொடுக்க முடியாததுமான தேசிய ஜனநாயக உரிமைகள் யாவும் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஸ்தாபிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படாதவரை தேசிய ஐக்கியமும், தேசிய நல்லிணக்கமும் உருவாகி ஸ்திரப்பட்டாலேயன்றி சமாதானத்தையும், சமூக முன்னேற்றதiதையும் அடைய முடியாது. இதுவொன்றே ஏகாதிபத்திய உலகமயமாக்கங்களையும், நமது நாட்டுக்குள்ளும் நமது நாட்டைச் சுற்றியும் நடக்கும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கொள்ளைகளுக்கும்
எதிராக உறுதியாகவும் இறுதியாகவும், வெற்றிகரமாகவும் போராடலாம்.

இந்த நாட்டின் எல்லா முற்போக்கு, இடதுசாரி, ஜனநாயக, மாற்றுச் சிந்தனையுடைய சக்திகளையும் கட்சி, இன, மத பேதங்களை மறந்து ஓரணியில் ஒன்று திரண்டு, ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பும் சம்பந்தமும் கொண்டு ஒன்றிலொன்று தங்கியிருக்கும் ஜனநாயகத்தையும், தேசிய நல்லிணக்தையும், தேசிய ஐக்கியத்தையும், சமாதானத்தையும் உருவாக்கி சமூக முன்னெற்றத்திற்காக போராடுமாறு எமது மத்திய குழு அழைப்பு விடுக்கின்றது.

மத்திய குழுவிற்காக

மு.க.அபூயூசூப்
பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக