இரண்டு ரூபா சம்பளம்
தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களில் பணிபுரியும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில், மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ மனை, கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளை நிலையங்களில் 1990க்குப் பிறகு, பகுதி நேர பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் காலை 8 மணிக்கு வேலைக்கு வரவேண்டும். அலுவலகத்தை சுத்தம் செய்தல், தண்ணீர் எடுத்து வைத்தல், வைத்தியர் ஊசி போடும் போது மாட்டுக்கு வால்பிடித்து உதவி செய்தல் போன்ற பணிகளை பகல் 12 மணி வரை செய்ய வேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. பணிக்கு வரவில்லை என்றால், இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படாது. மாநிலம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பணியை செய்து வருகின்றனர். இவர்கள் எட்டாம் வகுப்பு முதல் + 2 வரை படித்தவர்கள். காலை 8 மணிக்குப் பயணிக்கு செல்லும் இவர்களால், வேறு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் உலகின் பல பணக்காரர்கள் தற்போது இந்தியாவில்தான் உருவாகி வருகின்றார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக