புதன், 27 அக்டோபர், 2010

மன்னார் தமிழ் செம்மொழி விழாவில் மன்னார் ஊடகவியலாளர்கள் மதிப்பளிக்கப்படாதது எதற்காக?

-எஸ்.ஜெனிபா[கனடா]
மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22ம்,23ம்,24ம்,25 ஆகிய 4 தினங்களில் மன்னார் தமிழ் செம்மொழி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன்போது தென்பகுதியில் இருந்து வரவளைக்கப்பட்ட எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களும்,கவிஞர்களும் மாலை அனுவித்து,பொன்னாடை,போர்த்தி விருதுகளும், ஞாபகச் சின்னங்களும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

இவை உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடையம்.மன்னார் மாவட்டத்தில் இன்றி இலங்கையிலேயே இப்படி ஓரு பிரம்மான்டமான நிகழ்வு இதுவாகும்.ஆனால் இலங்கைக்காக பாடுபட்டு தமிழ் வழர்த்தவர்களை பாரட்டி கௌரவித்த மன்னார் தமிழ்ச் சங்கம் கடந்த யுத்த காலத்தில் தங்களின் உயிரை துட்சம் என நினைத்து கடமையாற்றி தமிழ் மக்களின் அவலங்களை வெளி உலகிற்கு கொண்டுவந்து உயிர் பிழைத்த மன்னார் ஊடகவியலாளர்கள் எவரும் கௌரவிக்கப்படாதது மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது.
நாட்டின் முதுகெலும்பு என கூறப்படும் ஊடகவியலாலர்களுக்கு மன்னார் தமிழ்ச் சங்கம் கொடுத்த கௌரவம் இதுதானா? இவ் பத்திரிகையாளர்களை இப்போது கௌரவப்படுத்தாது விட்டால் எப்போது கௌரவப்படுத்துவது? இவர்கள் தமிழுக்காக பாடுபட்டவர்கள் இல்லையா? தமிழ்ச்சங்கம் மன்னார் மாவட்டத்திற்கு 2 வருடங்களுக்கு முன் உருவாகி இருக்கலாம். ஆனால் பத்திரிக்கையாளர்களே பல வருடங்களுக்கு முன் உதித்து விட்டார்கள் என்பதனை மன்னார் தழிழ்ச் சங்கம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக