புதன், 27 அக்டோபர், 2010

ரிஸான நபீக்கை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவில் சிசுக் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருக்கும் ரிஸான நபீக்கை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கோரியுள்ளார். இதற்கான கடிதத்தினை சவூதி அரேபிய மன்னருக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரிஸான நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், நைப் ஜிஷியன் ஹலாப் அல் ஒடபீ என்பவரின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட்ட நிலையில் அவருக்கு ஏற்கனவே மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக