பாதரியாருக்கு தண்டனை வாங்கி தருவேன்: கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி ஆவேசம்
கன்னியாஸ்திரி மூலமே விவகாரம் அம்பலத்துக்கு வர... கிறிஸ்தவ திருச்சபைகள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளன.
நாம் குறிப்பிட்ட அந்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி. அவர் இப்போது திரைமறைவிலிருந்து வெளியே வந்து...
"என்னை திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து... கற்பழித்து... எனது நிர்வாணக் கோலத்தை செல்போன் மூலம் பட மெடுத்துவிட்டார். இதை இண்டர் நெட்டில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியே தனது ஆசைகளுக்குப் பலமுறை பணியவைத்து விட் டார்...'’’என்ற ரீதியில் திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வளர் மதியிடம் புகார் கொடுக்க.. காக்கிகள் அதிர்ந்து போய்விட்டார்கள். காரணம்... 156 வருட தொன் மையைப் பெற்று பிரசித்திபெற்ற கல்லூரி.
கமிஷனர் வன்னியபெருமாளுக்கு மகளிர் காக்கிகள் இந்தத் தகவலை பாஸ் பண்ண.. "புகாரை விசாரித்து உடனடியாக எஃப்.ஐ.ஆர். போடுங்கள்' என ஏ.சி. சீனிவாசனுக்கு உத்தர விட்டார் கமிஷனர்.இதைத்தொடர்ந்து எஃப்.ஐ.ஆர். போட்ட காக்கிகள்... புகார் கொடுத்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை... முதலாம் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்த... புகாரைக்கேட்டு திடுக்கிட்ட மாஜிஸ்திரேட் ஆபிரகாம்... பிளா ரன்ஸ் மேரி கற்பழிக் கப்பட்டிருக்கிறாரா? கர்ப்பம் கலைக்கப் பட்ட அடை யாளங்கள் தென்படுகிறதா என்றெல்லாம் முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அதனடிப் படையின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மருத்துவப் பரிசோதனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை சந்தித்து என்ன நடந்தது என்றோம். கொஞ்சம் தயக்கத்துடன் நம்மை எதிர்கொண்ட அவர், நக்கீரன் என்று அறிந்ததும்... ""நக்கீரனில் என் மனவேதனையை எப்படியோ ஸ்மெல்பண்ணி நீங்க எழுதிட்டீங்க. இதைப்பார்த்ததும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பிச்சிடுச்சி. சரி.. வர்றது வரட்டும்னு புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்துட்டேன்'' என்றவர்... தனது கசப்பான அனுபவங்களை விவரிக்க ஆரம்பித்தார்.
""எனக்கு சொந்த ஊர் ஆண்டிமடம் பக்கத்தில் இருக்கும் தஞ்சைசாவடி. என் அப்பா மலையப்பன் ஒரு விவசாயி. எனக்கு சகோதர-சகோதரிகள் எல்லாம் இருக்காங்க. சின்னவயசில் இருந்தே எனக்கு அன்னை தெரசா மாதிரி சேவை பண்ணணும், அருட்சகோதரியா மாறி கடவுள் தொண்டு புரியணும்னு ஆசை. இதுக்காக பாளையங்கோட்டை முனீர்பள்ளம் கான்வென்ட்டில் தங்கினேன். அங்கிருந்தபடியே சிஸ்டர் சுவக்கில் நர்சரி பள்ளியில் ஆசிரியையா வேலை பார்த்தேன். இயல் பாவே நல்லா பாடும் நான்... முறையா இசை படிக்கவும் ஆசைப்பட்டேன். அதனால் இசைப்பாடம் படித்து டிப்ளமோ பட்டம் வாங்கினேன். மிருதங்கம் கூட நல்லா வாசிப்பேன். இந்த சமயத்தில்தான் அங்க இருந்த கிளினஸ் சிஸ்டர் எனக்கு நெருக்கமான தோழியானாங்க. அப்ப அவரைப் பார்க்க திருச்சி புனித வளனார் கல்லூரியில் பேராசிரியரா வேலைபார்த்த ராஜ ரத்தினம் வருவார்.
அப்ப அவருக்கு என்னை அறிமுகப்படுத்திய கிளினஸ்... "உன்னைப்போலவே இவருக்கும் இசையில் நிறைய டேலண்ட் உண்டு. இவர் உன்னை உயர்ந்த இடத்துக்கு கொண்டுபோவார்'னு சொன்னாங்க. ராஜரத்தினமும் என்கிட்ட நல்லா பேசிபழக ஆரம்பிச்சார். 2004-2005-ல் திருச்சி கிராப்பட்டி சிறுமலர் கான்வென்ட்டில் தங்கி... அந்த நர்சரி பள்ளியில் ஆசிரியையா வேலைபார்த்தேன். 2005 ஜூனில் பேராசிரியரா இருந்த ராஜரத்தினம் புனிதவளனார் கல்லூரி முதல்வரா ஆனார். என்னை தன்னோட கல்லூரிக்கு வரச்சொன்னார். 2006 ஜனவரி 22-ந் தேதி மதியம் அவரைப் பார்க்கப்போனேன். அங்க அவருக்கு அருட்தந்தைக்குரிய வசதியான அறைகளை ஒதுக்கியிருந்தாங்க. அங்க அழைச்சிக் கிட்டுப் போனார். அங்க சாதாரணமா யாரும் உள்ளே நுழைஞ்சிட முடியாது. ரொம்பவும் அன்பா பேசிய அவர் குடிக்க கூல்டிரிங்ஸ் கொடுத்தார்.. அதைக் குடிச்சதும் மயங்கிப்போய்ட்டேன்.
நினைவு தெளிஞ்சப்ப... உடம்பே கூசிப் போயிடிச்சி. என் உடம்பில் எதுவும் இல்லை. ராஜரத்தினமோ... "இதை யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னா.. செல்போன்ல இருக்கும் உன் நிர்வாணப்படத்தை நெட்டில் போட்டுடுவேன்'னு மிரட்டி னார். அவரோட செல்வாக்கு... சபைல அவருக்கு இருக்கும் மதிப்பு.. இதை யெல்லாம் நினைச்சி வெளில சொல் லாம மனசுக்குள்ளேயே மருகினேன். அப்புறம் அடிக்கடி என்னைக் கூப்பிட்டு மிரட்டி பயன் படுத்திக்கிட்டார். இதில் 2008-ல் நான் கர்ப்பமானேன். இதை அவர்ட்ட சொல்லி நியாயம் கேட் டப்ப... "பயப்படாதே எனக்குத் தெரிஞ்ச ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறேன்'னு தென்னூர்ல இருக்கும் கே.எம்.சி. மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போனார்.
இதைத் தெரிஞ்சிக்கிட்டு எங்க அக்கா மேரியும் தோழி நான்ஸியும் மருத்துவமனைக்கு வர... அவங்களை பார்த்ததும் பதட்டமான ராஜரத்தினம்... என்னை அப்படியே விட்டுட்டுப் போய்ட்டார். மாத்திரை கொடுத்து அவங்க கருவைக் கலைச்சிட்டாங்க.
நடந்ததையெல்லாம் மதுரை ஆர்.சி. சபை தலைவர் தேவதாஸிடம் முறையிட்டுப் புகார் கடிதம் கொடுத்தேன். என்னை... விசாரணைக்கு போன 29-ந் தேதி மறுபடியும் வரச்சொன்னாங்க. நான் எனக்குத் தெரிஞ்ச நாலுபேரோட போனேன். அப்ப திருச்சபைத் தலைவர் தேவதாஸ்... "உன் குற்றச்சாட்டை ராஜரத்தினம் மறுக்குறாரே'ன்னு சொன்னார். "அவரை எனக்கு நேரா விசாரிங்க. அவர் என் கண்ணைப் பார்த்து தப்பு செய்யலைன்னு சொல் லட்டும்'னு சொன்னேன். அப்ப திருச்சபைத் தலைவரோட இருந்த சேவியர் வேதம்... "இது எங்கும் நடக்காத விசயமில்லை. சாமியார், சிஸ்டர்கள் விசயம் சாதாரணமானதுதான். ராஜரத்தினம் தவிர நீ யாரிடம் படுத்தே'ன்னு அசிங்கமா பேச.. என்னோட வந்தவங்க இதைத் தட்டிக்கேட்டாங்க.
உடனே கைகலப்பு வரை ஆச்சு. இங்க நீதி கிடைக்காதுன்னு நாங்க வெளில வந்துட்டோம். அருட் சகோதரியா புனிதமா வாழ நினைச்ச என்னை... நாசப்படுத்தி நடைபிணமா ஆக்கிய ராஜரத்தினத்தை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தராம ஓயமாட்டேன்''’என்றார் நீண்ட மூச்சிரைப்போடு.
புகாருக்கு ஆளான கல்லூரி முதல்வர் அருட்தந்தை ராஜரத்தினத்திடம் இது குறித்து நாம் கேட்டபோது... ""நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு சபையில் புரமோஷன் வரப்போகுது. இதைத்தடுக்க நினைக்கும் எதிரிகள் கீ கொடுத்தபடி அந்த பிளாரன்ஸ் மேரி ஆடுகிறார். அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''’என்கிறார் அழுத்தமாய்.
""அருட்தந்தை தரப்பினரோ, இதில் வேற ஒண்ணும் விஷயம் இல்லைங்க. ஒரு சமூகத்தினர் அந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்க 60 லட்சம் வரை பேரம்பேசிப் பார்த்தாங்க. ஒண்ணும் கதைக்கு ஆகலை. அதான்... அருட்தந்தை ராஜரத்தினத்தை அசிங்கமாவது படுத்தலாமேன்னு இப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்காங்க. அருட்தந்தை முன்ஜாமீன் முயற்சியில் இருக்கிறார்''’என்றனர் நம்மிடம்.
அரசு மருத்துவமனையில் பிளாரன்ஸ் மேரியைப் பரிசோதனை செய்த டாக்டர் பத்மாவதி...’""மேரி உறவு கொண்டதற்கான அடையாளங்கள் இருக்கிறது. அதே சமயம் கருக்கலைப்பு செய்து கொண்டதற்கான அடை யாளங்கள் தெரியவில்லை''’ என்று தனது ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.
சாதி ரீதியிலான கண் ணோட்டத்தில்தான் கமிஷனர் வன்னியபெருமாள் அவசர கதியில் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றெல்லாம் மேலிடம் வரை தகவல் போக..."ஒரு பெரிய கிறிஸ்தவ அமைப்பின் கீழ் நடக்கும்... பிரபல கல்லூரி அது. அதன் முதன்மைப் பொறுப்பாளர் மீது புகார் என்றால்... கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணவேண்டாமா? சரியான எவிடன்ஸ் இருக்கான்னு கூட பார்க்காம எப்படி எஃப்.ஐ.ஆர். போட்டீங்க? நியூட்ரலா இருக்க வேண்டாமா?'’என கமிஷனரிடம் கேள்விகள் கேட்கப்பட... திகைத்துப் போய்விட்டார் அவர்.
இதைத் தொடர்ந்து அருட் தந்தை ராஜரத்தினம் முன்ஜாமீன் மனுவை எதிர்க்கும் முடிவைக் கைவிட்டிருக்கிறது காவல்துறை.
இரு தரப்பும் ஆள் பலத்தோடு மோதுவதால்... விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
-ஜெ.டி.ஆர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக