வியாழன், 7 அக்டோபர், 2010

புலிகளின் முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள புலிகளின் முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்ய ப்பட மாட்டார்களென பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.
இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக