வியாழன், 28 அக்டோபர், 2010

தமிழ் நாவலை படமாக்கும் மணிரத்தினம்...?

திர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும் எதிர்பாராத விருதை தந்து மணிரத்தினத்தை சந்தோஷப்படுத்தியது ராவணன். இந்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான "ஜாகர்-லிகோல்ட்ரே குளோரி" விருதை ராவணன் படத்திற்காக பெற்றார் மணிரத்தினம்.



அண்மையில் நடந்து முடிந்த இயக்குனர் சங்க விழாவான டி40ல் தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பதை கௌரவிக்கும் வகையில் மணிரத்தினத்துக்கு ‘தங்க அடையாள அட்டை’வழங்கியது இயக்குனர் சங்கம்.(பாலா மற்றும் அகத்தியனும் இந்தக் கௌரவ அட்டையை பெற்றார்கள்.)  
இந்த சந்தோஷமான நிலையில்,  தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் மணிரத்தினம்... என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

மணிரத்தினத்தின் அடுத்தப் படம் என்ன...? என்ற எதிர்பார்ப்பினை நிறைவு செய்ய அடுத்தடுத்து மூனுபடங்கள் தயாராகவிருப்பதாக மணிரத்தினத்தின் வட்டாரத் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.      

ஹிந்தியில் ஒருபடம், கார்த்திக்கின் பையன் கௌதமை வைத்து ‘பூக்கடை’ என்றொரு படம் மற்றும் பெரிய நடிகரைவைத்து ஒருபடம் என்ற வகையில் கதைக்களத்துடன் தயாராகிவிட்டாராம் மணிரத்தினம்.   

இந்த வரிசையில் கூடுதலாக ஒரு படத்தின் செய்தியும் தற்போது ஹைலைட்டாக சேர்த்துள்ளது. இதுவரை புராண கதைகளை மையமாக வைத்து படம் இயக்கிவந்த மணிரத்தினம் அடுத்ததாக தமிழ் இலக்கியம் சார்ந்து படம் எடுக்கபோகிறாராம்.

தமிழுக்கு புதினம் என்ற முறையில் சிறந்த மணிமகுடமாக திகழ்வது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் புகழ் பெற்ற நாவலைத் தழுவி படம் எடுக்கப்போகிறாராம் மணிரத்தினம். இதில் கமலஹாசன் அல்லது விக்ரம் போன்றவர்கள் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

சோழர்களின் சிறப்பினை கூறும் ‘பொன்னியின் செல்வன்’ திரைவடிவமாக்கப்பட்டால் சந்தோஷம்தான். ஆனால் மணிரத்தினத்தின் படங்களில் வசனங்கள் குறைவாக இடம்பெறுவதுதான் வழக்கம். பொன்னியின் செல்வனோ தமிழ் வசனங்களின் தங்கச்சுரங்கமாயிற்று. எப்படி எடுப்பாரோ மணிரத்தினம்...!?

 ம்ம்ம்... பொறுத்திருந்துதான் பார்ப்போம்...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக