செவ்வாய், 5 அக்டோபர், 2010

நயன்தாராவை போல் பணியில் ஈடுபாடும், அர்ப்பணிப்பு குணமும் கொண்ட வேறு நடிகையை

நயன்தாரா முடிவு உபேந்திரா வருத்தம் கன்னடத்தில் உபேந்திராவுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ள உபேந்திரா, நயன்தாரா பற்றி கூறியதாவது: நயன்தாராவை போல் பணியில் ஈடுபாடும், அர்ப்பணிப்பு குணமும் கொண்ட வேறு நடிகையை நான் பார்த்தது கிடையாது. இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வருவார். அவரால் எந்த பிரச்னையும் ஏற்பட¢டதில்லை. இதுதான் அவருக்கு முதல் கன்னட படம். இதுவே அவரது கடைசி கன்னட படமாகவும் இருக்கப்போகிறது. அது வருத்தம் அளிக்கிறது. திருமணத்துக¢கு பின் நடிக்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். சின்சியரான நடிகைகளை தேடும் இயக்குனர்களுக்கு நயன்தாராவின் முடிவு அதிர்ச்சி அளிக்கும். இந்த படத்தில் அவரது கேரக்டர் முக்கியமானது. அது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இவ்வாறு உபேந்திரா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக