திங்கள், 11 அக்டோபர், 2010

ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரமும் அப்பாவிப் பொது மக்களையும் உயர்

ஐ.தே.கவும் எல்.ரீ.ரீ.ஈ.யுமே யுத்தநிறுத்த முறிவுக்கு பொறுப்பு: ஓட்டமாவடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும்,     எல்.ரீ.ரீ.ஈ.யுமே பொறுப்பு என ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நேற்று (10.10.2010)    நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த சுயாதீன சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் வை.எல். மன்சூர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத இயக்கமும் செய்து கொண்ட பிழையான ஒப்பந்தமும் அந்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரமும் அப்பாவிப் பொது மக்களையும் உயர் இராணுவ அதிகாரிகளையும் மதகுருமார்,    புத்தி ஜீவிகளையும் கொன்று குவிப்பதற்கும் கப்பம் அறவிடுவதற்கும் பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக இருந்தது.
வாழைச்சேனைக்கு சமையல் வேலைக்காகச் சென்றோர் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.     வாழைச்சேனை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலை எரிக்கப்பட்டன.   இத்தனைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போதே இவை நடந்தன.
நாட்டின் பாதுகாப்புக்கு விரோதமானதும் முஸ்லிம் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஏதுவானதுமாக ரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான அரசாங்கத்தினதும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளினதும் உடன்படிக்கையும், செயற்பாடுகளும் அடக்கு முறைகளும் இருந்தன.     யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் முறையற்ற செயற்பாடுகளும் போர் நிறுத்த உடன்படிக்கை செயழிலப்புக்கு காரணமாக அமைந்தன.
கல்குடாத் தொகுதி முஸ்லிம்களுக்கும்,    தமிழர்களுக்கும் இடையில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்தது. இவ்வாறு அவர் சாட்சிய மளித்தார்.
கடத்தப்பட்டு காணாமல் போனோர் கடத்தப்பட்டு சிறையிலுள்ளோர்  மற்றும்     காணிப் பிரச்சினை தொடர்பான அறுநூறு   விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் முப்பது பேரின் நேரடி வாக்கு மூலங்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எம். பி. பரணகம, கரு கஹவத்த, ரொஹான் பெரேரா, சீ. சண்முகம், மனோகரி இராமநாதன் ஆகியோர் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப் பற்று மத்திவாழைச்சேனை, கோற ளைப்பற்று வாழைச்சேனை, கோற ளைப்பற்று வடக்கு வாகரை போன்ற பிரதேசங்களில் இருந்து பொது மக்கள் சாட்சியங்களை அளித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக