வெள்ளி, 29 அக்டோபர், 2010

புலிவாலும் தூஷணமும்.புலிவால்கள் பற்றிய கருத்தில் தூஷணம் மிக முக்கியமானது

புலிவாலும்; தூஷணமும்
கடந்த ஞாயிறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ரி.பி.சி வானொலியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார். நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது வழக்கம் போல் ஒரு புலி வால் ஒன்று தூஷணம் ஒன்றை சொல்லிவிட்டு சென்றது. புலிவால்கள் பற்றிய கருத்தில் தூஷணம் மிக முக்கியமானது. கருத்துக்களை எதிர்கொள்ள வக்கில்லாத அல்லது அரசியல் அறிவு கெட்ட ஞானசூனியங்கள் இறுதியாகப் பயன்படுத்துவது தூஷணவார்த்தைகளைத்தான். கிட்டு முதல்கொண்டு அன்ரன் பாலசிங்கம் வரை தூஷணம் கொட்டுவதில் வல்லவர்களாக இருந்தபோது புலிவால்கள் அவ்வழியே இருப்பது வியப்பொன்றுமில்லைத்தான்.
சாதாரணமாக வீடுகளில் பொது .இடங்களில் தமிழர்கள் பலர் தூஷண வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கம். எரிச்சல் படும்போது கோபப்படும்போது தவறிழைக்கும்போது சச்சரவுகளின்போது தூஷணவார்த்தைகள் சர்வசாதாரணமாக வந்து விழும். ஆனால் வானொலியில் தொலைக்காட்சியில் பகிரங்கமாக தூஷணம் பேசுவது புலிவால்களுக்கு அலாதிப்பிரியம்.  ஒருமுறை டன் தொலைக்காட்சியில் பெண் அறிவிப்பாளரின் பாட்டு கேட்கும் நிகழ்ச்சியில் ஒரு புலி வால் வந்து தன்னுடன் படுக்க வரும்படி பகிரங்கமாக கேட்டது. டன் தொலைக்காட்சி புலிகளுக்கு எதிரானது என்பதால் புலிவால்களுக்கு அலர்ஜியாக அத்தொலைக்காட்சி இருந்தது.
நல்ல குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர்கள், கல்வியறிவு கொண்டவர்கள் சமூகத்தை நேசிப்பவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். சமூகத்தின் குப்பைகளாக கருதப்படுபவர்கள் குடும்பத்தையோ சமூகத்தையோ நேசிக்காதவர்களால்தான் இப்படி பகிரங்கமாக தூஷணம் பேசமுடியும். அதுவும் இந்தக் குப்பைகள் புலி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்றால் புலி அழிக்கப்படுவதில் எந்தவித தவறும் இருப்பதாக கொள்ள முடியாது.
வன்னியில் மக்களை தம்முடன் பலவந்தமாக முள்ளிவாய்க்கால் வரை புலிகள் அழைத்துச்செல்வதற்கு மோசமான தூஷண வார்த்தைகளை பாவித்ததாக தப்பி பிழைத்து பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் தொலைபேசியில் எனக்கு தெரிவித்திருந்தார். இப்படி ஒரு இயக்கம் அழிக்கப்பட்டது தமிழ்மக்களுக்கு மிகப்பெரிய விடிவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் இன்னமும் புலிவால்கள் புலி திரும்பி வரும் தலைவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்கிற நம்பிக்கையில் புலிகளை விமர்சனம் செய்பவர்களை இன்னும் தூஷணவார்த்தைகளால் அர்ச்சித்து வருகிறது. இந்த சமூகத்தின் சாக்கடைகளை அப்புறப்படுத்துவதற்கே இன்னுமொரு போராட்டம் நடாத்த வேண்டித்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக