வெள்ளி, 8 அக்டோபர், 2010

அதிமுக முன்னாள் அமைச்சர் வெட்டி கொலை, வெங்கடாசலம

ஆலங்குடி சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான வெங்கடாலசத்தை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அரிவாளால் தாக்கி விட்டு தப்பியது. படுகாயம் அடைந்த வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர் வெங்கடாசலம். இவருக்கு 91 தேர்தலின்போது, அதிமுகவில் சீட்டு கொடுக்காததால், ஆலங்குடி திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் சுயேட்சையாக நின்றார். இதில் ஆலங்குடி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கடந்த தேர்தலின்போது, அதிமுக சார்பில் ஆலங்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவருக்கு புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பெரும்பான்மையான ஆதரவு உள்ளது. அதிமுகவில் மாநில தலைமை பொறுப்புகள் வரை பதவி வகித்தவர். இவரது மகன் ராஜபாண்டிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு, வீட்டில் இருந்த அவரை மாருதி வேன் ஒன்றில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம், புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்வம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

siva - Madurai,இந்தியா
2010-10-08 07:28:49 IST
செத்தவரே ஒரு கூலிப்படை தலைவர் தாம்பா, வினை விதைச்சவன் வினை அறுப்பான்....
Siva - madurai,இந்தியா
2010-10-08 07:26:10 IST
seththavane oru koolippadai thalaivan thaampa....
கே.anbu - trichy,இந்தியா
2010-10-08 07:25:57 IST
மஞ்சள் துண்டாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படியா நிலைமை போனால் நீங்கள் போன தேர்தலில் வாக்களித்தபடி ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போட்டோம். அதனால் மக்கள் எப்போதும் எங்களுக்கு தான் வோட்டு போடுவார்கள் என்று கனவு காணாதீர்கள். வாக்களித்தபடி போட்ட அரிசி உங்கள் கட்சிக்கு வாக்கரிசி யாக போய்விடும். அல்லகைகளின் பேச்சை கேட்காதீர்கள். எங்கள் ஆட்சியில் வாக்கரிசி கூட ஒரு ரூபாய்க்கு விற்றோம் என்ற பெயர் வேண்டுமானால் தொடர்ந்து இப்படியே நடந்துகொள்ளுங்கள். அழிவு காலம் மிக அருகில் உள்ளது...
R.Krishnamurthy - Bangalore,இந்தியா
2010-10-08 07:08:04 IST
... Going by the events ,one can not lightly dismiss the thretening letters to Jayalalitha for addressing meeting in Madurai / she and her party need to be vigilant.One has to remember ,that was only in madurai even Indiraji was attcked....
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-08 07:06:19 IST
அய்யாவிடம் இருந்து நாளை ஒரு மடல் வெளிவரும்; அதில்: "அ.தி.மு.க.வில் அவர்களே வெட்டிக்கொண்டு ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் காட்டுமிராண்டித்தனம் இது. இப்படியெல்லாம் கொலை செய்து எங்கள் ஆட்சியை அழிக்க முடியாது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இன்று கூட ஜெயந்தி அம்மையார் என்னிடம் கூட்டணி குறித்து இறுதி ஒப்பந்தம் செய்து சென்றுள்ளார். உடன் பிறப்புகள் அமைதி காக்கவும்."...
சிங்கை கார்த்திக் - singapore,சிங்கப்பூர்
2010-10-08 07:04:55 IST
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... இவரால் இறந்தவர்கள் எத்தனையோ .. இவர் உயிருக்கு மட்டும் மரியாதையா ??...
TAMILAN - NELLAI,இந்தியா
2010-10-08 07:04:36 IST
ஹல்லோ அறிவாளிகளே என்னமோ AIDMK ஆட்சியல் எல்லோரும் சுதந்தரமாக ரோட்டில் அலைந்தமாதிரியும் இப்போது ரோட்டில் யாருமே நடக்கமுடியதுபோன மாதிரி எழுதுகிறீர்களே..அந்த நேரத்தில் AIDMK காரனை தவிர யாரும் ரோட்டில் நிம்மதியாக நடந்ததில்லை,,காரணம் அனைத்து ரௌடிகளும் AIDMK இல் இருந்ததுதான்,,,தற்சமயம் இதில் பெரும்பாலோர் போலிசால் வேட்டைஆடபட்டதால் நிம்மதியாக இருக்கிறோம்,,,,பாருங்கள் விசாரனைல் இந்த கொலைகூட உள்குத்து விவகாரத்தால் வந்ததாக இருக்கும்,,,,...
2010-10-08 07:00:30 IST
மிக ஆழ்ந்த வருத்தங்கள் ... அதிர்ச்சியான விஷயம் ... ஆலங்குடி தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் .. முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு .... இவருடைய இழப்பு அப்பகுதி மக்களுக்கு பேரிழப்பு ... என்று இந்த தி மு க ஒழியுமோ அன்றுதான் இது போன்ற வன்முறைகளுக்கு முடிவு .....கூலி படைகளை முதலில் ஒழிக்க வேண்டும் ........
ஏழுமலை - வில்லுபுரம்,இந்தியா
2010-10-08 06:37:01 IST
திமுக வினரிடமிருந்து இழப்பீடு வாங்கனுமுன்னு செல்வி சொல்லி முடிக்கல. அதுக்குள்ளே இப்படியா. ம்ம் ம் ம் ம் ....... குடுத்துடுவங்கய்யா குடுத்டுது டுவாங்கய்யா!!!!!!!!...
நாகராஜன் முது - HARRISBURG,யூ.எஸ்.ஏ
2010-10-08 06:26:51 IST
POLICE DEPARTMENT MUST FIND THE GANG AS SOON AS POSSIBLE....
APR.Kannadhasan - கேம்ப்...singapore.குலமங்கலம்சவுத்.pudukai.DT,இந்தியா
2010-10-08 06:25:09 IST
ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் நாங்கள் .....எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .....ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் ....
tamil - singapore,இந்தியா
2010-10-08 06:03:59 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!......
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 06:03:43 IST
ஒடனே தருமபுரி, சந்திரலேகான்னு இங்க வக்காலத்து வாங்க ஒரு கும்பல் கெளம்பும்...தருமபுரி சம்பவத்திற்கு சரியான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டே வழங்கிவிட்டது. முன்னாள் நடந்தவற்றைக்காட்டியே இது போல எத்தனை கொலை பாதகங்களை நியாயப் படுத்தபோகிரார்களோ ...புரியவில்லை...தமிழகம் உண்மையில் காட்டுமிராண்டி காலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது... மக்கள் காசுக்கும் இலவசத்திற்கும் மயங்கும் தன்மையிலிருந்து விழித்தாலொழிய தமிழகத்தினை காப்பாற்றுவது கடினம்....
karthick - soorakkadu,இந்தியா
2010-10-08 05:55:19 IST
அரசியல் விஷயங்கள் தவிர பொது வாழ்வில் மக்களுக்கு சிறந்த நண்பனாகவும் வள்ளலாகவும் திகழ்ந்தவர் சமுதாய துரோகிகளால் சாய்க்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது....
பத்மநாதன் - India,இந்தியா
2010-10-08 05:50:43 IST
ஆங் பாட்டி வைத்தியம் ஆரம்பமாகிவிட்டது! எப்போதெல்லாம் தனக்கு தோல்வி வரும் என்று தெரிகிறதோ அப்போது சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று அதை கெடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து விடுவார்!கொடநாடு போறது,சிறுதாவூர் போறதெல்லாம் சும்மா ஜாலியா இருக்க மட்டும் இல்லை இந்த மாதிரி சதி திட்டம் போடவும்தான்!அ.தி.மு.க கட்சியில் உள்ள அப்பாவிகளே தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்! மக்களும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்....
உண்மை - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 05:37:32 IST
இவன் ஒரு ரௌடி. இவனுக்கு இந்த சாவு கிடைத்ததில் தவறு இல்லை. யாரை வேணும்னாலும் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
snakebabu - singapore,சிங்கப்பூர்
2010-10-08 05:13:48 IST
கருணாவின் பொற்கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்னும் மணிமகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்க கல். வாழ்க உமது அரசாக ஆட்சி. வளர்க உமது பணநாயகம்,...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 03:56:18 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!...
துளசி ராமன் - சென்னை,இந்தியா
2010-10-08 02:23:37 IST
துளசி ராமன் சென்னை நாடு எங்க போகுதுனே தெரியல ... சட்டம் ஒழுங்கு சூப்பர் ......
உமர் - சவுதி,இந்தியா
2010-10-08 01:43:22 IST
என்ன வாழ்க்கைடா இது. இதுக்கு ஒரு முடிவு இல்லையா அல்ல...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-08 01:30:14 IST
மனுஷன் சாகுரப்போ நிம்மதியா சாகனும்..இது போல சாவெல்லாம் வரக்கூடாது..வழக்கம் போல திமுக ஆட்சியை குறை சொல்லி பலனில்லை.அவங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு ஆட்சி செய்யிறாங்க..எந்த அளவுக்கு திமிரும் செல்வாக்கும் சட்டத்தை மதிக்காத தன்மையும் இருந்துச்சுன்னா, இப்படி வீடு புகுந்து ஆளை போடுவானுங்க..சட்டம் போலீசெல்லாம் அதுக்கு பயப்படுரவனுக்கு மட்டும்தான் போலிருக்கு.....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 01:10:08 IST
தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு மிக மிக மோசமாக கெட்டு போயி உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வுகளாக மாறி விட்டது. கொலை கொள்ளை இல்லாத ஒரே ஒரு நாளை சொல்லுங்கள் பார்ப்போம். இப்ப தெரியுதா? ஜெயா ஏன் ஹெலிகோப்டேர்ல பறக்குறாங்கன்னு. திமுக ரௌடிகள், திமுக ரௌடிகள்................திமுக ரௌடிகள். எங்கும் ரௌடிகள் அட்டூழியம், அராஜகம், கொலை வெறி தாக்குதல்.மஞ்சள் துண்டு குடும்பத்துக்கு தெரியும் ஜெயாவால் மட்டும்தான் குடும்ப திமுக அராஜ ஆட்சிக்கு முடிவு கட்டமுடியும் என்று. மஞ்சள் துண்டு குடும்பத்தின் அராஜகங்களை ஒழிக்க ஜெயா விட்டால் வேற எவன்டா இந்தியாவில் ஏன் உலகத்தில் இருக்கிறான். ஒரு வேட்டி கட்டிய ஆம்பிளையை சொல்லுங்கள். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். இருப்பினும் ஜெயாவை ஆதரிப்பதால் அதிலிருந்து எனக்கு விதிவிலக்கு. ஒரு முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலை என்ன? எல்லாரும் கேரளாவுக்கு அடிமாடா போங்க. முழிக்காதிங்க. மஞ்சள் துண்டின் ஆசிர்வாதத்தால் கூடிய சீக்கிரம் அந்த நிலை தமிழ் நாட்டில் வரும். தமிழ்நாட்டில் உள்ள பணத்தை எல்லாம் சுரண்டியாச்சு. உசுரு மட்டும்தான் பாக்கி. அதையும் இப்படி தினம் தினம் எடுக்கிறானோ....
2010-10-08 00:56:33 IST
தேர்தல் வெற்றிக்காக அ.தி.மு.க எதையும் செய்யும். இப்போதே ஆரம்பமாகி விட்டது.இனி அ.தி.மு.க கட்சியில் உள்ள அப்பாவிகளே தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்! மாக்களும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.வெற்றிக்காக எந்த லெவலுக்கும் போக தயார்!...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-08 00:25:45 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு.அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக