வெள்ளி, 8 அக்டோபர், 2010

மீள்குடியேற்றத்திற்கென 350 சிங்கள மக்கள் யாழ்.குடாநாட்டிற்கு வந்துள்ளனர

தெற்கிலிருந்து மீள்குடியேற்றத்திற்கென 350 சிங்கள மக்கள் யாழ்.குடாநாட்டிற்கு வந்துள்ளனர் இவர்களனைவரும் 1983 ம் ஆண்டு இனக்கலவரத்தின்போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவா்களெனக் கூறப்படுகின்றது. நேற்று புதன்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள 240 பெண்களும் 60 ஆண்கள் மற்றும் 50 சிறுவர்களாகியோர் தற்போது யாழ் புகையிரத நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்களெனவும் அதற்கான ஆவணங்களாக அடையாள அட்டை மற்றும் பிறப்பு, திருமணச் சான்றிதழ்களைத் தாம் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
இத்தோடு மணியந்தோட்டம் போன்ற இடங்களில் காணிகள் இருந்தன. அவற்றில் தற்போது தமிழ் மக்கள் தங்கியுள்ளனர். எனவே அவை எமக்குத் தேவையில்லை. ஆனால் யாழ். மாவட்டத்திற்குள் எம்மை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் எனக்கேட்டுள்ளனர்.
விரைவாக எம்மை மீள்குடியேற்றம் செய்வதற்கான கோரிக்கைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக