புதன், 6 அக்டோபர், 2010

ஆர்யா காட்டில் இப்போ அடைமழைதான்...

ஆர்யாவின் அதிரடி வேட்டை ஆரம்பம்...  

      நான் இப்போ ரொம்ப பிஸி...  இந்த சத்தம் வந்த திசையில் யாருய்யா அது? என திரும்பிப் பார்த்தா, அட...!  நம்ம ஆர்யா.  அடுத்தடுத்து படங்கள் அவரைத்தேடி ஓடிவருகின்றனவாம்.காலில் இப்போ சக்கரம் கட்டிக்கொண்டுதான் பரபரக்கிறார் மனுஷன்.



இருக்காதா பின்ன...

மதராசபட்டினம் தந்த உற்சாகத்தில், பாஸ் என்கிற பாஸ்கரன் தந்த புத்துணர்ச்சியில் ‘வேட்டை’ படத்தில் நடிக்க மும்முரமாகிவிட்ட ஆர்யாவுக்கு அடுத்தும் ஒரு படம் ரெடியாகிவிட்டது.

தயாநிதி அழகிரியின் கிளௌட் நைன் நிறுவனத்திற்காக லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ படத்தில் நடிக்கவிருக்கும் ஆர்யா,  மிஸ்கினின் அடுத்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது வேற யாருமில்லை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக லிங்குசாமிதான். ஏற்கனவே பூபதிபாண்டியன் இயக்கத்தில் படம் பண்ணுவதாக இருந்தார் லிங்குசாமி.  இப்போது மிஸ்கின் இயக்கத்தில் தனது வேட்டை நாயகன் ஆர்யாவையே வைத்து படம் தயாரிக்கப்போகிறாராம் லிங்குசாமி. 

மிஸ்கின் தனது ‘யுத்தம் செய்’ படத்தை முடித்துள்ளார். சேரன் - பிரசன்னா நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.  அதற்குமுன் இந்தப் படத்தையும் தொடங்கவிருக்கிறார் மிஸ்கின். 
 
இது போக,  பாலாவின் ‘அவன் இவன்’ படத்திலும் ஆர்யாவின் பகுதி முடிக்கப்படாமல் இன்னும் இருக்கிறது. இன்னொரு புறம் அவர் தயாரிப்பில் முடிந்துள்ள ‘படித்துறை’ படத்தினை வெளியிடும் பணியும் பாக்கியிருக்கிறது.  இப்படி அடுத்தடுத்த சினிமாப் பணிகளில் பிஸியாகவிட்டார் ஆர்யா. 

ஆர்யா காட்டில் இப்போ அடைமழைதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக