புதன், 6 அக்டோபர், 2010

பொன்சேகா விடுதலைக்காக நாளை தலதா மாளிகையில் விஷேட பூஜை

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலையும் நல்லாசியும் கிடைக்க வேண்டு மென்றும்  புதன் கிழமை கண்டி தலதா மாளிகையில் விஷேட பூஜை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொட்டி நாஹவிகாரையின் பிரதம குரு வண. மாதுலுவாவே சோபித தேரர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். பி.ப. 2.30 மணிக்கு இது ஒழங்கு செய்யப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும்தெரிவிக்கையில்-
பல்வேறு கொலைகளுக்குக் காரணமானவர்களும் மற்றும் முன்னர் பயங்கரவாதப் பட்டியலில் பெயர் குறிப்பிடப் பட்வர்களுமான குமரன் பத்தமநாதன், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றவர்கள் சுதந்திரமாக இருக்க நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த ஒரு தளபதி சிறையில் அடைக்கப் பட்டிருப்பது வருந்தத் தக்கவிடயம். எனவே அவரது விடுதலைக்காக நாம் பாடுபடவேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக