புதன், 13 அக்டோபர், 2010

இரு மாணவிகள் கடத்தல்..!யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் புதுக்காட்டுச் சந்தியில

யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் புதுக்காட்டுச் சந்தியில் வைத்து நேற்று மதியம் 2.00 மணியளவில் வெள்ளை வானில் வந்தவர்களால் இரண்டு மாணவிகள் கடத்தப்பட்டுள்ளார்கள். செம்பியன்பற்றுக் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த அருளானந்தம் ஜீவா (வயது 18), செபஸ்தியான்பிள்ளை ஜெனித்தா (வயது 13) ஆகிய மாணவிகளே கடத்தப்பட்டவர்களாவர். இவர்கள் தும்பளையிலுள்ள தமது உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிவந்து, புதுக்காட்டுச் சந்தியில் இறங்கினர். அங்கு வீட்டுக்குச் செல்கின்றமைக்கு இன்னொரு பஸ்ஸ{க்காக காத்திருந்தபோதே கடத்தல் இடம்பெற்றுள்ளது. இருவரும் செம்பியன் பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகளாவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக