புதன், 13 அக்டோபர், 2010

கூட்டணியில் ஒருவரிடம் இருக்க முடியவில்லையே: ராமதாஸ்

விருத்தாசலம் : ""அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கின்றனர். ஒருவரிடம் கூட இருக்க முடியவில்லையே. அனைவரும் நம்மை அழிக்கப்பார்க்கின்றனர்,'' என, விருத்தாசலம் அருகே நடந்த பயிற்சி முகாமில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்காலில் புவனகிரி சட்டசபை தொகுதி இளைஞர் - இளம் பெண்கள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:நாம் எம்.எல்.ஏ., ஆகிவிடலாமா என நமது கட்சி பொறுப்பாளர்கள் கனவு காண்கின்றனர். புவனகிரி தொகுதியில் 10 பேர் அந்த லிஸ்டில் உள்ளனர். ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் தான் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.கட்சிக்கு உழைப்பவருக்கு தான் சீட்டு. தமிழகத்தை நிறைய பேர் ஆட்சி செய்துள்ளனர். ஒற்றுமை இல்லாததால் ஒரு வன்னியன் இதுவரை ஆள முடியவில்லை. காசுக்கு ஓட்டு போடுகின்றனர். பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்.இளைஞர்கள் எல்லாம் பா.ம.க., வில் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால் 100 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம். அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கின்றனர். ஒருவரிடம் கூட இருக்க முடியவில்லையே. அனைவரும் நம்மை அழிக்கப்பார்க்கின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் வன்னியர்கள் ஜெயிக்கக் கூடாது என, ஏழு தொகுதிகளிலும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தோற்கடித்தனர். கட்சி பொறுப்புகளுக்கு இளைஞர்களை நியமித்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.தற்போது என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. தொழிலாளர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்கள் சிந்தும் ஒரு துளி வியர்வைக்கு ஒரு ரூபாய் என்று பார்த்தால், அவர்களால் கொடுக்க முடியாது. அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக கொடுக்க வேண்டும்.இப்பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை செய்துள்ளோம். நாங்கள் கடுமையான போராட்டம் செய்தால், என்.எல்.சி., நிர்வாகம் தாங்காது. எனவே, தொழிலாளர்களின் கோரிக்கையை என்.எல்.சி., நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-10-13 05:19:50 IST
சில நாட்களாக காணோமே? உங்க இடத்தை கலைஞர் பிடிச்சிட்டார் வாசகர்களிடம். இன்று மீண்டும் தக்க வைத்துக்கொள்வீர். வாருங்கள் வாசகர்களே!...
சக்கர கௌஇந்டெர் - ஷார்க்பே,ஆஸ்திரேலியா
2010-10-13 04:49:18 IST
தாசு, பத்து வருடத்துல இரண்டு தடவ மாறலாம், ஆனா இரண்டு வருடத்துல பத்து தடவதான் மாறகூடாது....
Av Ramesh - Boonlay,சிங்கப்பூர்
2010-10-13 04:46:31 IST
வாயா வால்பாறை வராதா? ஏன்டா இப்படி ஜாதி அரசியல்ல குளிர் காய்ரே ....உலகம் என்றால் என்ன அம்மை அப்பன் என்றால் என்ன என்று போங்கு ஆட்டம் ஆடியது போல. நீ வன்னியன் என்றால் என்ன அன்புமணி என்றால் என்ன என்று கேட்பவன் எல்லாம் தெரியும் கொயா மக்களுக்கு .........
ராமதாஸ் அன்பன் - விர்ஜினியா,யூ.எஸ்.ஏ
2010-10-13 04:37:39 IST
Mr. Ramdas, you said you will be the prime party in 2011. Then why are you still depending on the other parties? Arent you ashamed of not growing your party? Everytime you talk, you talk about partnering with other party. Now that none of the parties are giving a shit to you, you should start thinking of some realistic promises to the people. If you say "Alcohol abolishment" even your son will not vote for you....
ராமதாஸ் சிதம்பரம் - singapore,இந்தியா
2010-10-13 04:37:15 IST
எத்தனை போராட்டம் நடத்தினாலும் தமிழகத்தில் திராவிட கழகம் அதை செயல்படுத்த விடாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
k.vidhya - sanjose,யூ.எஸ்.ஏ
2010-10-13 04:20:42 IST
today's joke started....
வணக்கம் - மதுரை,இந்தியா
2010-10-13 03:43:46 IST
எங்கடா ஆளை காணோம்னு பார்த்தேன் .. வந்துட்டார்யா வந்துட்டார்யா... வாசகர்களே இன்றைய நாள் இனிய நாள்தான் ... ஸ்டார்ட் மியூசிக் ......
கணேஷ் - இந்திய,இந்தியா
2010-10-13 03:22:01 IST
......................? தாஸ் கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ்......
நாகா - சென்னை,இந்தியா
2010-10-13 03:12:59 IST
இவனுக்கு வேற வேலை இல்லை ..........
GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-13 03:08:44 IST
ஐயா சனி தாங்கி உங்களால் தமிழகம் பசுமை இழந்தது..வேலை வாய்ப்புகளை இழந்தது இந்த வீனா போன திமுக அரசு உங்களை அடக்க வக்கில்லாமால் போனது ஆகா உங்களுக்கும் எந்த திட்டமும் கொள்கையும் இல்லை.. ஜாதியை தவிர.. தமிழகம் இருண்ட மாநிலமகா வளர்ச்சி இல்லாத மாநிலாமாக போக நீங்களும் கருணாநிதியும் தான் காரணம்.. உங்கள் இரு குடும்பத்தால் தமிழகம் சீரழிந்து விட்டது.. இனியும் உங்களை யாரும் எந்த கட்சியும் சேர்த்துக்க கூடாது உங்களை வைத்துகொண்டு திமுக, அதிமுக பட்ட பாடு போதும் என தான் நினைப்பார்கள். உங்களின் திட்டம் உங்கள் மகனுக்கு எம்பி பதவி அதன் மூலம் மந்திரி பதவி கிடைக்கணும் இது தான் உங்கள் திட்டம் கொள்கை... யாரிடம் கூட்டணி முக்கியம் என இல்லை உங்கள் மகனுக்கு யார் பதவி தந்தாலும் அங்கே போய் விடுவீர்கள், பேசாமல் அரசியல் வியாபாரி விஜ்யகாந்த் கட்சியில் போய் சேர்ந்து விடுங்கள் அந்த ஒரு இடம் தான் இப்போ உங்களுக்கு பாக்கி விஜியகாந்த் கட்சிக்கு கொள்கை இல்லை .திட்டமும் இல்லை உங்களை போல அவர் தான் சரி.....
ரங்கராஜன் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ,இந்தியா
2010-10-13 03:03:43 IST
திமுக கூட்டணியில் இருந்தபோது பாபா படபெட்டியை உன் ஆட்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள்;;படம் தியேட்டரில் ஓட முடியாத படி என்னென்ன செய்தீர்கள்? இன்று உன்னாலும் உன் ஆட்களாலும் அந்த காரியம் செய்ய தைரியம் இருக்கிறதா ?இந்திரன் படத்திற்கு சின்ன இடையூறு செய்தாலும் போலீசார் பின்னி எடுத்து விடுவார்கள் என்ற பயத்தால் அதை பற்றி பேசவே மாட்டாய். நீ கூட்டணி என்று புலம்புவதன் அர்த்தமே அது தானே ?உன்னையும் உன் கோடிக்கணக்கான சொத்தையும் பாதுகாக்க கூட்டணியும் ஏமாளி வன்னியரும் தேவை.தோல்வி என்றால் வன்னியரின் தோல்வி;வெற்றி என்றால் சின்ன அய்யாவும் பெரிய அய்யாவும் புடுங்கியது என்று புராணம் பாடு கிறாய் ;;கடைசி வரை திமுகவும் அதிமுகவும் சேர்த்தாமல் உன்னை தனியாகக வேண்டும் அப்போது தான் உனது போலியான வன்னிய பாசம் வெளிவரும்...
indian - chennai,இந்தியா
2010-10-13 02:44:01 IST
ஸ்டார்ட் தி மியூசிக்...
H நாராயணன் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-13 02:08:18 IST
வாய்யா வா.. எங்க தினமலர்ல சிரிப்பு பகுதியே காணோமேன்னு நெனச்சேன். ஒருத்தரிடம் இருக்க முடியலன்னு அடுத்தவங்க கிட்ட போன. சரி.. .அங்கயும் முடியலன்னு திரும்ப மொதல்ல போனவங்க கிட்டே போனா அசிங்கமா இல்ல... (தேர்தல் கூட்டணிய சொன்னேன்) கூட்டணியில இருந்தோமா... டப்பி கட்டிக்கிட்டு இருந்தோமான்னு தெனம் தெனம் கோவணத்துக்குள்ளே போன எறும்பு மாதிரி கொடச்சல் கொடுத்துகிட்டே இருந்தா... நசுக்காம என்ன செய்வாங்களாம்?...
ஜாதி இல்லாத தமிழன் - California,யூ.எஸ்.ஏ
2010-10-13 01:52:03 IST
சிக்குனார்டா சின்னசாமி! "எம்.எல்.ஏ., ஆகிவிடலாமா என நமது கட்சி பொறுப்பாளர்கள் கனவு காண்கின்றனர்" 4 மாவட்டத்தில் உள்ள PMK முதல்வராக நினைக்கும் பொழுது பொறுப்பாளர்கள் கனவு காண கூடாதா! என்னையா கொடுமை இந்த தமிழகத்துக்கு வந்த சோதனை!?? **************** NLC தொளிலார்களுக்காக கொதிக்கும் நீங்கள், பா மா வுக்ககாக உயிர் நீத்த முதல் 20 வன்னியருக்கு குடும்பங்கல்லுகு என்ன செய்தீர்கள்? ******************** "அனைவரும் நம்மை அழிக்கப்பார்க்கின்றனர்" உங்களை dmk அழிக்கட்டும் நீங்கள் ADMK வை அழியுங்கள் ADMK வை காங்கிரஸ் அழிக்கட்டும் காங்கிரஸ்சை MDMK அழிக்கட்டும் MDMK வை விஜயகாந்த் அழிக்கட்டும் தமிழ் நாடு நிம்மதியாக இருக்கட்டும்!...
aa - TN,இந்தியா
2010-10-13 01:49:43 IST
JOKER IS BACK AFTER எ LITTLE பிரேக் !!!!...
mohan - tamilnadu,இந்தியா
2010-10-13 01:46:06 IST
அவர் என்ன சொல்ல வரார்...
ரமேஷ் selva - ஐகியஅரபுஎமிரேட்ஸ்,இந்தியா
2010-10-13 01:44:09 IST
யோவ் சும்மா இரு எதாவது சொல்லிற போறேன்...
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-13 01:43:32 IST
மருத்துவர் அய்யா அவர்களே! மூன்றாவது பெரிய கிளை கழகமான காங்கிரசை பார்த்து இன்னுமா நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை? உடும்புபிடியாக ஒரு கட்சியை பிடித்து கொள்ள வேண்டும். அவர்களாக நம்மை தூக்கி வீசும் வரை பொறுமை அவசியம். செம்பு பாலுவிடம் அதனை கற்றுக்கொண்டு சீரோடு வாழுங்கள்!...
ராஜசேகர் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-13 01:38:47 IST
ஜாதி வெறி பிடித்து அலையறியே உனக்கு வேற வேலை இல்லையா??...
ராஜசேகர் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-13 01:36:40 IST
டூ யு கேன் நோ வொர்க்?...
siva - Trichy,இந்தியா
2010-10-13 01:35:01 IST
கொஞ்ச நாள் பொறு தலைவா. தேர்தல் நேரத்தில் யாராவது சேர்த்துக்குவாங்க . அப்புறம் நாம அவர்களை ஒழிக்கலாம்....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-13 01:34:31 IST
அடிப்படையிலே உங்களிடம் ஒரு "அவசரம்" காட்டுவது என்பது எதிலும் ஒரு எதிர்மறையான பலனைத்தான் தரும். பொறுமை என்பதே இல்லை..கோவம் தலைக்கு ஏறுவது என்பது நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல. அதனை தாங்கள் புரிந்துகொண்டாலே போதும் இந்த சூழ்நிலை மாறும். கூட்டத்தை பார்த்ததும் உணர்ச்சி வயபடுதலும் அதனால் நீங்கள் அள்ளி தெளிக்கும் "சத்தியங்கள்" அனைத்தும் பின்னர் மறந்து போய்விடுகின்றது. இது தவறான முன்னுதாரணம்.."பிள்ளை"பாசத்தில் நீங்கள் "மஞ்ச துண்டு"பெருசை தோற்கடித்து விடுவீர்கள். மக்கள் நலன் என்றால் தன் மக்கள் நலம் என்றே நீங்கள் மஞ்ச துண்டுவை போன்றே நம்புகின்றதால் ஏற்பாடு எதிர்மறையான பலன்தான் இத்தனைக்கும் காரணம். பிள்ளையின் பதவிக்காக நீங்கள் உங்களை நீங்களே மதிப்பில் தாழ்த்தி மஞ்ச துண்டு வீட்டு வாசலில் தவம் இருந்தது நல்ல உதாரணம்... சென்ற முறை உங்களது "சம்பந்தியின்" வெற்றிக்காக கூட்டணி தர்மத்தை மறந்து "குடும்ப" பாசத்தால் செய்தது துரோகம்தானே? அப்புறம் எப்படி உங்களை மதிப்பார்கள். உங்களது இன மக்கள் நாளொரு வண்ணம் பொழுதோர் காட்சியாய் "மெலிந்து" வர..ஆனால் தாங்கள் அரசியலுக்கு வந்த பின்னர் "செழிப்பின்" கணிசமான மாற்றம் உங்களது மக்களையே "சிந்திக்க" வைக்கும்போது மற்றோருக்கு அதுகூடவா தெரியாது. முதலில் நேர்மை, கட்டுப்பாடு..கூட்டனிஎன்றால் ஒரு தர்மம் இவற்றை நீங்கள் கடைபிடித்தால்தான் உங்களுக்கென்று ஒரு மரியாதை கிடைக்கும். அதை நீங்கள் மதிக்க மறுத்தால் உங்களது கோவணத்தை உருக பார்த்தார்கள் என்கிறமாதிரியான வசனங்கள் மீண்டும் மீண்டும் உங்களால் வெளிப்படும்.....
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
2010-10-13 01:25:28 IST
ஒருவரிடம் கூட இருக்க முடியவில்லையே. அனைவரும் நம்மை அழிக்கப்பார்க்கின்றனர்.இது சனிதாங்கியின் புலம்பல்..உங்களையும் உங்கள் கட்சியையும் யாரும் அழிக்கவில்லை..உங்கள் கட்சிக்கு ஆப்பு வைத்தது நீங்கள் தான்..ஒரு எம்பி சீட்டுகாக உங்களின் பதினெட்டு உறுபினர்களை கோபாலபுரதிர்க்கும் அன்ன சொரியாலதிர்க்கும் காலை முதல் மாலை வரை அலைந்தது நினைவு இல்லையா? பணமா? இனமா?என பென்னகரத்தில் புலம்பி இரண்டாம் இடத்துக்கு வந்ததும் உங்கள் கட்சியினர் உங்களுக்கு கொடுத்த கடைசி வாய்ப்பையும் மறந்து உங்கள் மகன் எம்பி சீட்டுகாக நீங்கள் உங்கள் கட்சி உறுபினர்களை கோபாலபுரத்துக்கு காவடி தூக்கியதும் வன்னிய தொண்டர்கள் உங்கள் கட்சியினர் மறக்கவில்லை..இப்போது வன்னியர் இடத்தில் ஒற்றுமை இல்லை என்கிறிர்கள் முதலில் உங்கள் கட்சியினரை டாஸ்மாக் குடிகாரர்கள் என்றிர்கள்,இப்போது பணம் வாங்கி ஒட்டு போடுகிறார்கள் என்கிறிர்கள்,இன்னும் என்னவெல்லாம் உங்கள் கச்சி தொண்டர்களை சொல்லணுமோ சொல்லுங்கள்..பாவம் அவர்கள் கூட்டணி குறித்து பிப்ருவரி பிறகு தான் முடிவு எடுக்கணும் என்று சொன்னிர்கள்..அது வரை ரெண்டு பக்கமும் பந்து வீசிக்கொண்டு இருங்கள் ஆனால் உங்களை போல உள்ளவர்களை வரும் தேர்தலில் மக்கள் மண்ணை கவ்வ வைக்கணும் உங்கள் கட்சி அழிய காரணம் சனிதான்கியன நீங்கள் தான் வேறு யாரும் இல்லை..இதுக்கு மேல என்ன சொல்ல?...
ராமன் - Madurai,இந்தியா
2010-10-13 01:04:43 IST
அண்ணே ராமதாசு, நீ இல்லாம எங்களுக்கு பொழுது போகல. வீட்டுல வளர்க்கிற நாயி, போடுறத தின்னுட்டு இருக்கும். ஆனால், தெரு நாயி என்ன நினைக்கும்? எந்த தெருவில எச்சில் இல அதிகமா கிடைக்கும் என்று பார்க்கும். நீ என்ன சொன்ன? யாரு அதிகமா எச்சில் இல (சீட்டு) போடுறகளோ, அங்க தான் போவேன் என்று சொன்ன. அதனால தான் உன்னைய அம்மாவும் அய்யாவும் இப்படி அலைய விடுரங்கோ. தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் நாளிருக்கு.அதுக்குள்ள, நீ பொலம்பியே போயிருவ போல. நீ இல்லாட்டி எங்களுக்கு போரடிக்கும். அய்யா, ராசா, எப்படியாச்சும் அய்யா கால்ல விழுந்து அல்லது உன் மகன அனுப்பி கூட்டணி வச்சுக்க. இல்லாட்டி உன் பாடு திண்டாட்டம் தான். அம்மாவும் கூட்டனிய பெருசா அமைக்கனுமுனு நினைகிறார்கள். அங்கேயும் நூல் விட்டு பாரு. எது கிடைச்சாலும் ஏத்துக்க. நூறு சீடெல்லாம் வெறும் கனவுதான். உன் பிள்ளையாண்டான் மந்திரி ஆகனும்னு உனக்கு ஆசை. அதுக்காகவாவது கூட்டணி வச்சுக்க. எச்சில் இல பொருக்கனும்னு முடிவு பண்ணிட்ட. அப்புறம் எதுக்கு இந்த வம்பு. அடுத்த தெருவா இருந்தா என்ன? பகத்து தெருவா இருந்தா என்ன?...
ராஜ்குமார் - warri,நைஜீரியா
2010-10-13 00:42:55 IST
unallam எவன்யா கூட்டணி வைப்பான். உனக்கு ஏத்த கூட்டனணி dmk...
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-13 00:41:27 IST
யாருப்பா இந்த நேரத்துல கதவ தட்றது, அடடா நம்ம தாசு மாமா எதுக்குயா இந்த நேரத்துல வந்திருக்க...என்னாது எவனும் உன்னிய ஆட்டத்துல சேத்துக்க மாட்டேங்குராங்களா? உன் கொழுப்பு ஒரு இடத்துல இருக்காம குரங்கு மாறி தாவிகிட்டே இருந்தா எவன் சேப்பான் சொல்லு...நான் தான் சொன்னேல்ல இந்த பாழா போன அரசியல் நமக்கு சரி பட்டு வராது பேசாம புண்ணாக்கு வியாபாரம் பண்ணி பொழச்சிக்கலாம் னு. நீ கேட்டியா? கேட்கலியே. இப்ப அழுது என்ன பண்றது...அது இருக்கட்டும் காமன்வெல்த்து, கவுன்சிலர் பையன் அப்டி இப்டி னு ஏகப்பட்ட டென்ஷன் ல எல்லாத்தையும் மறந்திட்டு நிம்மதியா எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. நீ வேற இந்த நேரத்துல வந்து என்ன படுத்துறியே...ஐயோ நான் இப்ப என்ன பண்ணுவேன். உடம்பெல்லாம் வேர்க்குதே, கையெல்லாம் நடுங்குதுதே மாமா ஒன்னு பண்ணு தலையில துண்ட போட்டுக்கிட்டு அப்டியே வீட்டு பின் வாசல் வழியா ஓடி போய்டு. நான் முன் வாசல் வழியா எஸ்கேப் ஆயிடுறேன்...யாராவது கூப்ட்டாலும் காது கேட்காது மாறியே ஓடிரு...ஐயோ அதுக்குள்ளே சேவல் கூவுற சத்தம் கேட்குதே. இன்னிக்கு எத்தன பேரு என் மாமன தாளிக்க போறாங்களோ தெரியலையே...இந்த ஆளுக்கு என் அக்காவ கொடுத்து நான் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல...என்னிக்குதான் மனுஷன் திருந்துவாரோ.........
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-13 00:39:09 IST
யோ யோ சரிதான் நிறுத்துயா நீ உன்னோட சங்க. எப்போ பாத்தாலும் இந்த பச்சபுள்ள படுக்கைல ப்பேண்டு கசகசன்னு பண்ணி வெக்கிறா மாறி ஒரு வகைதொகை இல்லாம நிமிசத்துக்கு நிமிஷம் மாறி மாறி பேசிக்கிட்டு. ஒரு பைத்தியகாரண கூட நம்பி அவன் கைல கத்திய கொடுத்தாலும் கூட தப்பு இல்ல. அவன் கூட கொஞ்சம் ஸ்டெடியா இருப்பான். ஆனா உன்னிய நம்பி போடுற ஒவ்வொரு ஓட்டும் செல்லாகாசுயா. உனக்கு ஒட்டு போடுற அந்த ரெண்டு நிமிஷம் பஸ் ஸ்டாண்ட் ல நின்னு பிச்சை எடுக்கலாம். அது கூட கொஞ்சம் கவ்ரவமா இருக்கும். யோ, எங்க ரோட்ல திரியிற சொறி நாய்க்கு கூட ஒரு கொள்கை இருக்கு. அது கூட நெனச்ச எடத்துல கால தூக்கி ஒன்னுக்கு போவாது. எப்பவுமே சரியா கரெக்ட்டா அந்த மூணாவது வளஞ்ச கரண்ட் கம்பத்துலதான் போய் ஒன்னுக்கு போவும். கொய்யாமரத்துவீடு கோமளம் என்னதான் சோறு போட்டாலும் மோந்து கூட பாக்காது. கடைசி வீடு கருநாயி என்னதான் மினுக்கினாலும் கிட்ட கூட போவாது. அவ்வளவு உறுதியா, நிலையா, கவ்ரவமா வாழ்க்கை நடத்துது. ஆனா நீ அப்படியா? சொல்லு. மாராப்ப மாத்தி போடுறா மாறி மாத்தி மாத்தி பேசிட்டு, உசுபேத்தி உசுபேத்தி மக்களை ஏமாத்திகிட்டு உன்னோட வயத்த கழுவிக்கிட்டு திரியிற. யோ, உன்னோட பொழப்பு பொலைக்கிரதுக்கு நல்லதா நாலு காளமாடு வெச்சு சினை சேத்துற வேலை பார்க்கலாம். அதுகூட எவ்வளவோ தேவல. ஏதோ நாலு பச்சபுள்ளைங்களுக்கு பாலாவது கெடைக்கும். உன்னியும் நம்பி வாரானுக பாரு அவனுகள சொல்லணும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக