வெள்ளி, 22 அக்டோபர், 2010

இலங்கை தொழிலதிபர் சென்னையில் கைது

முறையான ஆவணங்கள் இல்லாமல் இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் முகமதுஹாசன். 32 வயதான இவர், வெளிநாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் நேபாள நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

இவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டில் உரிய முத்திரைகள் எதுவும் இல்லாததை இமிகிரேஷன் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக