வெள்ளி, 22 அக்டோபர், 2010

பிரிட்டனில் 2 இந்தியா வம்சாவழி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

லண்டன்: பிரிட்டனில் அரசுக்கு ‌அதிகம் செலவினங்களை சமர்பித்த இந்திய வம்சாவழி எம்.பி.க்கள் இருவர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. லண்டனிலிருந்து வெளிவரும் சன்டே டெலிகிராப் பத்திரிகையில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதாவது: பிரிட்டனின் மேல்சபை என அழைக்கப்படும் ஹவுஸ் ஆப் லார்ட் சபையில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் சிவராஜ் பவுல், அமீர் பஹாதியா, பரோனஸ் உதின் ஆகியோர் பிரிட்டனின் பாராளுமன்ற மேல்சபையான ராஜ்யசபை எம்.பிக்களாக உள்ளனர். இதில் இந்திய வம்சாவழி தொழிலதிபரான சிவராஜ்பவுல்,தனது சொந்த பிளாட் பதிவிற்காக அரசு பணத்தை செலவழித்துள்ளார், மற்‌றொரு தொழிலதிபரான அமீர் பஹாதியா தனது வீட்டின் மராமத்துப்பணிகளுக்காக அரசு பணத்தை உபயோகித்துள்ளார் என மேல்சபை செலவினங்களுக்கான துணை கமிட்டியின் தலைவர் பரோனஸ் மன்னிங்ஹாம் புல்லரிடம் புகார் கூறப்பட்டிருந்தது. இதில் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து‌ரை செய்யபட்டிருந்தது. இதில் சிவராஜ்பவுல் 40,000 பவுண்ட் அபராதமாக அரசுக்கு திருப்பி செலுததுவதாகவும், அமீர் பஹாதியா 27,00 பவுண்ட் அபராதம் செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இவர்கள் மீதான கிரிமினல் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக பவுலிற்கு நான்கு முதல் ஆறு மாதங்களுக்கும், அமீர் பஹாதியாவிற்க ஆறு முதல் ஒரு வருடம் வரை (ராஜ்ய சபை ) மேல்சபையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்‌றொரு எம்.பி.யான பரோன் உதின் வங்கதேசதத்தைசேர்ந்த பிரிட்டனின் முதல் முஸ்லீம் எம்.பி . இவரும் அரசுக்கு தவறான செலவு கணக்கை சமர்பித்துள்ளார். இவருக்கு 1,25,000 பவுண்ட் அபராதமும், 18 மாதம் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

LORD SWARAJ PAUL IS A BILLIONAIRE INDUSTRIALIST FAMOUS FOR PREACHING HONESTY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக