வியாழன், 14 அக்டோபர், 2010

வவுணதீவில் மற்றொரு வயோதிபர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழப்பு..!


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த 70வயதான கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார். இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக