வெள்ளி, 22 அக்டோபர், 2010

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஏன்: தென்பிராந்திய கடற்படை தளபதி பதில்

தமிழக மீனவர்களை குறிவைத்து இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை என, தென்பிராந்திய கடற்படை தளபதி சுஷில் கூறியுள்ளார்.

டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற கோவை ஐஎன்எஸ் அக்ரானி கடற்படைப் பிரிவு வீரர்களுக்காக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அவரிம், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தங்களை தாக்குவதாக தமிழக மீனவர்கள் கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சுஷில்,

தமிழக மீனவர்களை குறிவைத்து இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை. எப்போதாவது ஏதாவது சிறுசில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் போது, அவர்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு எத்தேச்சையாக அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இலங்கை கடற்படையினரை கண்டு தமிழக மீனவர்கள் பயந்து ஓடுவதாலும், அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய இலங்கை கடற்படையினரிடையே சுமூக உறவு நிலவுகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக