திங்கள், 11 அக்டோபர், 2010

அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி:"அரசுத் துறைகளில் தற்போது பணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி' என, சுப்ரீம் கோர்ட் கருத்து  தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறையில் பணியாற்றும் மோகன்லால் சர்மா என்பவர் மீது, லஞ்சம் வாங்கியது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இ தொடர்பாக, கீழ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில்,  மோகன் சர்மா குற்றவாளி என, தீர்ப்பளிக்கப்பட்டு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து, பஞ்சாப் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மோகன்லால் சர்மாவை, ஐகோர்ட் விடுதலை செய்தது. இதன்பின், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. நீதிபதிகள் மார்கண்டேயே கட்ஜு, தாக்கூர் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.சி.பி.ஐ., தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஆஜராகி, "கீழ் கோர்ட்டால் மோகன் சர்மா குற்றவாளி' என, அறிவிக்கப்பட்டதை தெரிவித்தார்.

இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:நாட்டில் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாதது துரதிருஷ்டவசமானது. வருமானவரி, விற்பனை வரி, கலால் வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. இது மிகவும் கவலை, அதிருப்தி தரும் விஷயம். அரசுத் துறைகளில் பணம் இல்லாமல் தற்போது எந்த வேலையும் நடப்பது இல்லை.இதைப் பார்க்கும்போது, லஞ்ச நடவடிக்கைகளை அரசு ஏன் சட்டமாக்க கூடாது என கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயிக்கலாமே. ஒருவர், தன் வேலையை முடிக்க வேண்டுமெனில், 2,500 ரூபாய் லஞ்சமாக கொடுக்கலாம் என, அறிவித்து விடலாம்.

இதன்மூலம் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வர். அதிகாரிகளிடம் பேரம் பேச வேண்டிய தேவையே இல்லையே. அரசு அதிகாரிகள் ஏழைகளாக உள்ளனர். அவர்களை குறை கூறக் கூடாது. ஏனென்றால், பணவீக்கம் அதிகரித்து விட்டது. இதுகுறித்து மூத்த வக்கீல் வேணுகோபால் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மூத்த வக்கீல் வேணுகோபால் கூறுகையில், "பள்ளிகளில் நல்ல ஒழுக்கத்தை போதிக்கும் வகையிலான கல்வியை கற்றுத் தருவதன் மூலம், எதிர்கால தலைமுறையாவது, லஞ்சம் இல்லாமல் வாழும்' என்றார்.

மற்றொரு வழக்கு:பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்தது தொடர்பான மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக, மூத்த வக்கீல் வேணுகோபால் ஆஜரானார்.

அப்போது நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகையில், "வேணுகோபால், இதுபோன்ற வழக்கிற்காக, மூத்த வக்கீலான நீங்கள் ஆஜராவீர்கள் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்றார்.

இதற்கு பதிலளித்த வக்கீல் வேணுகோபால், "இது மாதிரி வழக்குகளின் தன்மை பார்த்து, ஆய்வு செய்து ஆஜராவதால், ஏராளமான வழக்குகளை நான் இழந்துள்ளேன்' என்றார்.

இதையடுத்து, கோர்ட் ஹால் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய வக்கீல் வேணுகோபால், "எதிர்காலத்தில் வழக்குகளில் ஆஜராகும் போது, கோர்ட் தற்போது தெரிவித்த விஷயங்களை மனதில் கொண்டு, வழக்குகளை தேர்வு செய்வேன்' என்றார்.
Mohan - Singapore,இந்தியா
2010-10-11 04:56:13 IST
அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வேண்டாம். அந்தந்த வேலைக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயார் செய்து வெளியிட்டால் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும்....
அம்பானி - n,இந்தியா
2010-10-11 04:51:51 IST
கேடு கேட்ட இந்தியா .....இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கபடுகிறேன்.............ஒவொரு இந்தியனும் தலை குனிய வேண்டும் .... இந்தமாதிரி ஒரு கருத்து சொன்னால் supreme கோர்ட் ஐ யார் மதிப்பார்கள் ....து .......
SKumar - USA,யூ.எஸ்.ஏ
2010-10-11 04:23:39 IST
நான்சென்ஸ். வளருங்கள் மக்களே...
குப்பன் - ஆஸ்திரேலியா,இந்தியா
2010-10-11 03:51:27 IST
ஆஹா என்ன பொருத்தம்.. நீதிபதி மார்கண்டேய கட்ஜு இனி மார்கண்டேய ஜட்ஜு என்று அழைக்கப்பட வேண்டும். இந்த பெயர் மாற்றத்திற்கு கூட எவ்வளவு லஞ்சம் என்றும் அவரே தீர்மானிக்கலாம் ...!...
krishnamoorthy - chennai,இந்தியா
2010-10-11 03:35:11 IST
முதலில் ஊழல நீதிபதிகளை நீக்க உச்ச நீதிமன்றம் முன்வரட்டும் .பிறகு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நீதிக்கு முன் பயப்படுவார்கள். ஊழல நீதிபதிகளை உச்ச நீதி மன்றம் இட மாற்றம் மட்டுமே செய்கிறது. எந்த தண்டனையும் தருவதில்லை. முதலில் நீங்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல்பட்டு நீதி வழங்குங்கள். காசு வாங்கி நீதி வழங்க வேண்டாம் ....
குப்பன் - ஆஸ்திரேலியா,இந்தியா
2010-10-11 03:32:32 IST
சபாஷ்... சரியான தீர்ப்பு..! எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. அதனால் எல்லா வேலைக்கும் ஒரு விலை நிர்ணயித்து அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் இல்லை. File நகர்த்த ஒரு கூலி, கையெழுத்து போடஒரு கூலி என்று நிர்ணயிக்காலாம். நீதிபதி Costing Experts என்று நிரூபிக்கிறார்கள் போலும்...! யார் கூறினார்கள் இந்தியா ஒரு வளரும் நாடு என்று? நாம் வளர்ந்து விட்ட நாடு...! இந்த நீதிபதிகள் மிக்கப் படித்தவர்கள் ... what cant be cured, has to be solemnised. இந்த கோமாளிகள் வாய்க்கு சர்க்கரை போடுங்கள். கொஞ்சம் லஞ்சம் கூட கொடுங்கள்.. இனி அரசியல் வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை இந்த மகான்களை மேற்கோள் காட்டி சம்பாதிக்கலாம். தாங்கள் செய்யும் வேலைக்கு ஒரு அளவு கோலாவது இருக்கும்...! "லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாதது,மிகவும் கவலை, அதிருப்தி தரும் விஷயம்." என்று வேறு கனம் நீதிபதிகள் அங்கலாயித்தார்கலாமே ...! "கோர்ட் ஹால் முழுவதும் சிரிப்பலை எழுந்தது." - செய்தி. நாட்டில் எல்லாருக்கும் குசும்பு... வாழ்க... நம் நாடு ...!...
ப.rajenthira - chennai,இந்தியா
2010-10-11 03:01:55 IST
தெளிவாக இது 60 ஆண்டு கால காங்கிரெஸ் ஆட்சியின் கேவலமான நிர்வாக திறன் என்றும் கூறலாமே?...
திரு ஜெய் - கனடா,கனடா
2010-10-11 02:52:32 IST
இதை வாசிக்கும் பொழுது, திரு சோ ராமஸ்வாமி அவர்கள் எவ்வளவு தீர்ர்கதரிசி என்று தோன்றுகிறது. அவரின் "முஹபத் பின் துக்ளக்" (முப்பது வருடங்களுக்கு முன்பு) நாடகத்தில் "அரசு உழியருக்கு இவ்வளவு தான் சம்பளம் என்பது போல், இவ்வளவு தான் கிம்பளம் என்றும் நிர்ணயிக்க வேண்டும்" என்று அமைச்சரவையில் ஒரு கோரிக்கை எழும். அதில் சொல்ல படும் ஒரு உண்மையான வாசகம் - What was wrong yesterday is right today and what is wrong today will be right tomorrow....
அரசு - Chennai,இந்தியா
2010-10-11 01:36:51 IST
நாடு எங்கு போய்கொண்டு இருக்குனு தெரியலையே?...
சாமு - மதுரை,இந்தியா
2010-10-11 01:08:10 IST
Presently from USA, I am sending my comments. Date backs to 1977 or so, - SUPREME COURT`S ` COMMENTS- WERE MADE IN THE TAMIL MOVIE BY Mr. CHO RAMASWAMI, MOHAMMED-BIN-THUGLAG. It is a pity, the movie`s statement comes true and very much bad, to be commented by THE SUPREME COURT OF INDIA. Samu....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக